TRCSL implementation of number portability and unlimited internet packages
இலங்கையர்களின் தொலைபேசி பாவனையில் வரவுள்ள அதிரடியான இரண்டு மாற்றங்கள்
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தொலைபேசி மற்றும் இணைய பாவனைகளை மேம்படுத்தல் , புதிய நுகர்வோர் கொள்கைகளை அமுல்படுத்தும் திட்டத்தின் கீழ் இரு புதிய மாற்றங்கள் மிக விரைவில் இலங்கை தொலைபேசி பாவனையாளர்களுக்கு கிடைக்க உள்ளது..
உலகின் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இலங்கையில் உள்ள இணைய பாவனை மேம்படுத்தும் பொருட்டு எல்லையற்ற இணைய சேவையினை அனைத்து மக்களுக்கும் வழங்கும் திட்டமொன்றை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அமல்படுத்த உள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் இலங்கையில் காணப்படும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஆன dialog,mobitel, hutch,airtel ஆகிய அனைத்து நிறுவனங்களும் UNLIMITED INTERNET packages ஐ வழங்கவுள்ளனர்..
ஏற்கனவே பேக்கேஜ்கள் காணப்பட்டாலும் அவை அதிகூடிய கட்டணத்திலும் , அதேபோல குறித்த எல்லையைத் தாண்டும்போது இணைய சேவையின் வேகமும் குறைக்கப்படும்..இதனால் வெளிநாடுகளில் வாழும் மக்கள் பெற்றுக் கொள்கின்ற எல்லையற்ற கட்டுப்பாடுகள் அற்ற இணைய சேவையினை இலங்கை மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி குறித்த நிறுவனங்கள் தாம் வழங்கவுள்ள பேக்கேஜ்கள் தொடர்பான விபரங்களை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு கடந்த மாதம் அளவில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து அதாவது புது வருடத்திற்கு முன்னர் மக்களால் இந்த எல்லையற்ற இணைய இணைப்புகளை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தவாரம் அனைத்து package கள் வெளியானதும் வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.
தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் தொலைபேசி சேவை வழங்குனரின் மாற்றிக் கொள்ளும் புதிய தொழில்நுட்ப நடைமுறை(number portablility) இரண்டாவது மாற்றமாக கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கையின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் எண் பெயர்வுத்திறனை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு ஒன்றை டி.ஆர்.சி எடுத்துள்ளது. டி.ஆர்.சி யின் வலைத்தளமான www.trc.gov.lk இல் பொது ஆலோசனைக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் கூட நடைமுறையில் உள்ளது.
உதாரணமாக நீங்கள் ஒரு dialog பாவனையாளர் ஆக இருந்தால் உங்களுடைய தற்போதைய தொலைபேசி இலக்கத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதே இலக்கத்தில் ஏர்டெல் அல்லது mobitel சேவைக்கு மாற முடியும்..
இதேபோல் எந்த சேவை வழங்குனரின் இருந்து கொண்டு உங்களால் இன்னுமொரு சேவை வழங்கும் நிறுவனத்துக்கு தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் தாவ முடியும்..
நீங்கள் எந்த சேவை வழங்குவதற்கு மாறினாலும் உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை கீழ் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் மாறாமல் அப்படியே இருக்கும்.
இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட சேவை வழங்குனரின் இலக்கத்தை பலவருடங்களாக பயன்படுத்துபவராக இருக்கலாம்.ஆனால் குறித்த நிறுவனத்தின் சேவை உங்களுக்கு திருப்திகரமானதாக அமையாமல் போகும் பொழுது வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறும் முடிவுக்கு வருவீர்கள்..சில நேரங்களில் நீங்கள் பாவிக்கும் நிறுவனத்தை விட இன்னும் ஒரு நிறுவனம் சிறந்த பேக்கேஜ் களை வழங்கும் பொழுது மாற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம்
ஆனால் நீங்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் குறித்த இலக்கத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஏற்கனவே உங்கள் தொடர்பு இலக்கங்களை வைத்திருக்கும் நபர்கள் உங்கள் பழைய இலக்கத்திற்கு தொடர்பு கொள்வார்கள் என்ற அச்சத்தினால் நீங்கள் இன்னும் ஒரு சேவை வழங்குனர் க்கு மாற முடியாமல் இருக்கும்.
இந்த புதிய நடைமுறையின் மூலம் உங்களால் இலக்கத்தை மாற்றாமல் நிறுவனத்தை மற்றும் மாற்றிக் கொள்ள முடிவதால் அது குறித்து நீங்கள் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இருக்காது..
தன்னுடைய சந்தாதாரர் எந்த நேரமும் இன்னும் ஒரு நிறுவனத்துக்கு மாறிவிடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக சிறந்த சேவையை வழங்குவதற்கு முயற்சி செய்யும்.. அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய கட்டணங்களை விட சிறந்த மற்றும் குறைவான கட்டணங்களை வழங்கி மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்யும்..
இதனால் மக்களின் இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் வளர்ச்சி அடைவதுடன் சிறந்த சேவையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உருவாகும்..
நமது இணையதளம் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி அரசு கற்கைநெறி பற்றிய தகவல்கள் மட்டுமல்லாது உங்களுக்கு பயன் தரக்கூடிய அரசாங்கத்தின் சேவை அறிமுகங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரையை பகிர்ந்து கொள்கின்றோம்.
“குறித்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.*
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – JOIN HERE