இலங்கையில் whatsapp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் வாட்ஸ் அப் (whatsapp) உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு..

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள் மூலமாக குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக பரவி வரும் லிங் தொடர்பாக இலங்கையின் கணனி அவசர பிரிவு ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது…

கார்கில்ஸ் ஃபுட் சிட்டி(Cargills food city) தன்னுடைய நாற்பதாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பல்வேறு பரிசில்களை வழங்குவதாக ஒரு லிங்க் கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப்பில் பரவி வருகின்றது..

இது தொடர்பாக கார்கில்ஸ் ஃபுட் சிட்டி(Cargills food city) விடுத்துள்ள அறிக்கையில் தமது நிறுவனம் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாட வில்லை எனவும் அது தொடர்பாக பரப்பப்படும் லிங்க் போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த LINK பின்வருமாறு காணப்படும். புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

குறித்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என இலங்கையின் அவசர கணணிப் பிரிவு தெரிவித்துள்ளது..உங்களுடைய மொபைலில் உள்ள தகவல்களை திருடும் சம்பவங்களும் சில நேரங்களில் உங்கள் மொபைலை ஹேக்(Hack) செய்ய கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

கார்கில்ஸ் ஃபுட் சிட்டி மட்டும் இல்லாமல் நெஸ்லே(nestle) மற்றும் கொக்கோ கோலா(coco-cola) கம்பெனிகளும் தமது நிறைவு ஆண்டுகளை கொண்டாடுவதாக பல்வேறு லிங்க் பரப்பப்பட்டது.. குறித்த லிங்குகளை பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் காணக்கூடியதாக இருந்தது..

தயவுசெய்து மொபைலில்  பரவும் போலியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.. மற்றவர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்..