REPOET ABOUT SCHOOL HOLIDAY
சிங்கள வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் காணப்படும் முக்கியமான விடயங்களை தமிழில் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை குறித்த பாடசாலையின் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிக்காவிட்டாலும் ஆன்லைன் வசதியில் கல்வியை ஏற்படுத்தக்கூடிய பாடசாலைகள் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாக இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
நடத்தப்படும் ஆன்லைன் கற்பித்தலை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின் இணைப்பை துண்டிக்க வேண்டாமென பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை குறித்த ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
உங்கள் பாடசாலை நடைபெறுமா இல்லையா என்பதை குறித்த பாடசாலை மட்ட அதிபர் அல்லது வலயமட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக தீர்மானிக்கப்படும்.. போக்குவரத்து வசதிகள் பிரச்சினையாக உள்ள மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாவிட்டாலும் உங்கள் பாடசாலையின் அதிபர் அல்லது ஆசிரியருக்கு அறிவிப்பதன் மூலம் ஒன்லைன் மூலமான வசதியை ஏற்படுத்திக் கொள்ள கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய முடியும்.. எனவே உங்கள் பாடசாலை மட்ட அதிபர் அல்லது ஆசிரியர்களை தொடர்புகொண்டு இது தொடர்பாக வினவி முடிவுக்கு வரவும்.
