Eastern Province MSO Limited Exam (Management Service Officers) Vacancies 2026

ORGANIZATION Eastern Provincial Public Service Commission
POSTManagement Service Officers(LIMITED)
CLOSING DATE14.08.2026

EAST Management Service Officers

வழிகாட்டல் குழுவில் இணைய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

JOIN GROUP (CLICK HERE)

EX/REC/26/09

கிழக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2026

கிழக்கு மாகாண பொதுச்சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடம் இருந்து 53 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முக்கிய விபரங்கள்

வெற்றிடங்கள் 53
சம்பளம் (MN 02-2025) ரூபா 48,470 – 82,800/-
ஆரம்ப திகதி 2026.07.16 (09:00 AM)
முடிவுத் திகதி 2026.08.14 (10:00 AM)

கல்வித் தகைமைகள்

  • G.C.E. (O/L): ஒரே அமர்வில் அல்லது இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத அமர்வுகளில் மொழி மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
  • இதில் 02 பாடங்களில் திறமைச் சித்தி (Credit) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.

சேவைத் தகைமைகள்

  • விண்ணப்ப முடிவுத் திகதியன்று கிழக்கு மாகாண பொதுச் சேவையில் நிரந்தர நியமனம் பெற்று 05 வருடங்கள் திருப்திகரமான சேவை காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • PL மட்ட அல்லது MN-01-2025 சம்பளத் தொகுதியின் கீழ் சம்பளம் பெறும் உத்தியோகத்தராக இருத்தல் வேண்டும்.
  • வயது எல்லை: மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு என்பதால் உச்ச வயது எல்லை கிடையாது.

பரீட்சை மற்றும் கட்டணம்

  • பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,000/-
  • செலுத்தும் முறை: கிழக்கு மாகாணத்திலுள்ள ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தில் “செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்” எனும் பெயரில் செலுத்தி பற்றுச்சீட்டை பதிவேற்ற வேண்டும்.
  • பரீட்சை மையங்கள்: மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கல்முனை.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் www.ep.gov.lk ஊடாக ஒன்லைன் (Online) மூலமாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின் அதன் பிரதியை தரவிறக்கி, திணைக்களத் தலைவரின் உறுதிப்படுத்தலுடன் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்:

செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,
கிழக்கு மாகாணம், கன்னியா வீதி, வரோதயநகர், திருகோணமலை.

EAST Management Service Officers

வழிகாட்டல் குழுவில் இணைய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

JOIN GROUP (CLICK HERE)