College of Education on Technology Application 2026

College of Education on Technology Application 2026

தேசிய கல்வியியல் கல்லூரி (NCOE) அனுமதி – 2026

குளியாப்பிட்டிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரி

மொத்த வெற்றிடங்கள் 210
முடிவுத் திகதி 10.06.2026
கல்வித் தகைமை 2024 A/L
வயது எல்லை 25 (01.01.2026 இல்)

2024 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் 210 ஆசிரியர் பயிலுநர்களை குளியாப்பிட்டிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அடிப்படைத் தகுதிகள்

  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
  • 01.01.2026 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
  • திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள்

  • க.பொ.த (உயர்தரம்) 2024: ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • க.பொ.த (சாதாரண தரம்): மொழி (சிங்களம்/தமிழ்) மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியியுடன், 3 பாடங்களில் திறமைச் சித்தி (C) பெற்றிருத்தல் வேண்டும்.
  • சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் ஒரு சாதாரண சித்தி (S) பெற்றிருப்பது கட்டாயமாகும்.

பாடநெறிகள் மற்றும் வெற்றிடங்கள்

பாடநெறி தேசிய மட்டம் மாவட்ட மட்டம் மொத்தம்
பொறியியல் தொழில்நுட்பம் (ET) 35 35 70
உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் (BST) 35 35 70
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) 35 35 70
மொத்தம் 105 105 210
ஒன்லைன் application இன்னும் வெளியாகவில்லை வெளியானதும் பகிரப்படும் பின்னர் வெப்சைட் இணை செக் செய்யவும்
ஆதாரம்: இலங்கை வர்த்தமானி (2026.05.22)