College of Education on Technology Application 2026
தேசிய கல்வியியல் கல்லூரி (NCOE) அனுமதி – 2026
குளியாப்பிட்டிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரி
மொத்த வெற்றிடங்கள்
210
முடிவுத் திகதி
10.06.2026
கல்வித் தகைமை
2024 A/L
வயது எல்லை
25 (01.01.2026 இல்)
2024 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் 210 ஆசிரியர் பயிலுநர்களை குளியாப்பிட்டிய தொழில்நுட்ப தேசிய கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அடிப்படைத் தகுதிகள்
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- சிறந்த உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
- 01.01.2026 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
- திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகைமைகள்
- க.பொ.த (உயர்தரம்) 2024: ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- க.பொ.த (சாதாரண தரம்): மொழி (சிங்களம்/தமிழ்) மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியியுடன், 3 பாடங்களில் திறமைச் சித்தி (C) பெற்றிருத்தல் வேண்டும்.
- சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் ஒரு சாதாரண சித்தி (S) பெற்றிருப்பது கட்டாயமாகும்.
பாடநெறிகள் மற்றும் வெற்றிடங்கள்
| பாடநெறி | தேசிய மட்டம் | மாவட்ட மட்டம் | மொத்தம் |
|---|---|---|---|
| பொறியியல் தொழில்நுட்பம் (ET) | 35 | 35 | 70 |
| உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் (BST) | 35 | 35 | 70 |
| தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) | 35 | 35 | 70 |
| மொத்தம் | 105 | 105 | 210 |
ஒன்லைன் application இன்னும் வெளியாகவில்லை வெளியானதும் பகிரப்படும் பின்னர் வெப்சைட் இணை செக் செய்யவும்
ஆதாரம்: இலங்கை வர்த்தமானி (2026.05.22)