SLITHM courses 2021- Ministry of tourism

Sri Lanka institute of tourism and hotel management is the premier government institute in the country providing education and training for the development of human resources for tourism and hospitality industry..

சுற்றுலா துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தில் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

உயர் தரத்தை அல்லது சாதாரண தர கல்வியை முடித்துவிட்டு சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களுக்கு குறித்த கற்கைநெறி சிறந்த வாய்ப்பாக அமையும்.

1. விருந்தோம்பல் முகாமைத்துவ தேசிய டிப்ளோமா..

கட்டணம்- 5750 ரூபாய் மாதாந்தம்

தகைமை- உயர்தரப் பரீட்சையில் 3 அமர்வுக்கு மேற்படாத அனைத்து பாடங்களிலும் சித்தி..

சாதாரண தர பரீட்சையில் இரண்டு அமர்வுக்கு மேற்படாத அது ஆங்கிலத்தில் சித்தி அல்லது உயர்தரத்தில் சாதாரண சித்தி..

சாதாரண தர பரீட்சையில் இரண்டு அமர வைக்கும் ஏற்படாது கணித பாடத்தில் சாதாரண சித்தி..

வயது 18 தொடக்கம் 24

இது 3 ஆண்டு முழுநேர கற்கை நெறியாகும்..முடிவுத் திகதி 2021 மே மாதம் 21ஆம் திகதி..

2.சான்றிதல் மட்டம்..

இந்த கற்கை நெறியில். Professional cooking , restaurant and bar service, hotel management ஆகிய பாடங்கள் முக்கியமாக கற்பிக்கப்படும்..

கட்டணம் பாடங்களுக்கு ஏற்றது போல் 3000 தொடக்கம் 5000 வரை மாதாந்தம் அமையும்..

தகைமை – சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக மூன்று திறமை சித்திகள் 

தொடர்புடையத் துறைகள் ஓராண்டு தொழில்முறைப் பயிற்சி உடைய கைவினை மட்டம் அல்லது தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் தொழில்முறை பயிற்சியுடன் ஏற்கனவே தொழில் புரிபவர்கள்..

இது ஐந்து மாத முழு நேர கற்கைநெறி ஆகும்.. விண்ணப்ப முடிவுத் திகதி 2021 மே 21..

3.இடைநிலை மட்டம்.

இது ஆறு மாத முழு நேர கற்கை நெறியாகும்..

இதற்கான கட்டணம் 3500 தொடக்கம் நான்காயிரத்து 500 வரை மாதாந்தம் அமையலாம்..

தேவையான தகைமைகள்

தொடர்புடைய தொழில்துறை பயிற்சி 4 அடிப்படைகள் அல்லது மூன்று அடிப்படைகள் அல்லது ஒரு அடிப்படை சான்றிதல் மட்டம் 

துறையில் இருந்து நேரடியாக நுழையும் விண்ணப்பதாரர்கள் சாதாரணதர தகைமை உடன்  முகாமைத்துவ அல்லது மேற்பார்வை மட்டத்தில் தொழில் துறையில் குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்..

4.Pastry and bakery கற்கைநெறி

இது மூன்று மாத முழு நேர கற்கை நெறியாகும்.. மாதந்தோறும் 5,000 ரூபாய் கட்டணம்..

தேவையான தகைமைகள்

சாதாரணதரம் கற்று இருத்தல்..

வயது 17 தொடக்கம் 25

விண்ணப்ப முடிவுத் திகதி 2021 மே 21..

5.நிகழ்ச்சி முகாமைத்துவ சான்றிதழ் கற்கைநெறி.

இது ஆறு மாத முழு நேர கற்கை நெறியாகும்.. இதற்கான மொத்த கட்டணம் 35,000 ரூபாய்..

தேவையான தகைமை

ஆங்கில மொழியில் சாதாரண சித்தி ஒன்றுடன் சாதாரண தரத்தில் அதற்கு இணையான சித்தி அல்லது ஐந்து ஆண்டுகள் சுற்றுலா துறையின் அனுபவம் அல்லது ஆங்கில மொழித்திறன் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்தில் வேலை செய்து இருத்தல்..

விண்ணப்ப முடிவுத் திகதி 13 மே 2021 

6. Trekking and hiking guide சான்றிதழ் கற்கைநெறி

இது நான்கு மாதங்கள் கொண்ட கற்கைநெறி இதற்கான மொத்த கட்டணம் 40 ஆயிரம் ரூபா ஆகும்.

ஆங்கில மொழியில் சாதாரண சித்தி ஒன்றுடன் சாதாரண தரம் அதற்கு இணையான சித்தி..

அல்லது ஆங்கில மொழித்திறன் உடன் சாகசச் சுற்றுலா துறையில் 5 ஆண்டுகள் அனுபவம்..

விண்ணப்ப முடிவுத் திகதி 13 மே 2021..

குறித்த கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்த மாணவர்கள் குறிப்பாக சமுர்த்தி பயனாளிகள் புலமைப்பரிசில்கள் விண்ணப்பிக்க முடியும்..

அனைத்து கட்சிகளுக்கும் விண்ணப்பிக்க பெண்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர்..

இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ONLINE LINK – APPLY