கிழக்கு மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள்..

கிழக்கு மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள்..

கிழக்கு மாகாணத்தில் சுமார் 700 ஆசிரியர்கள் இடங்கள் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது..குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல் பெர்னாண்டோ தெரிவித்தார்..

இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்… மாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் உறுதியாக இருக்கின்ற போதிலும் ஆசிரியர் களுக்கான தேவையும் காணப்படுகின்றது.. கணிதம் ,கணினி தொழில்நுட்பம்,விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் வெற்றிடங்களை காணப்படுகின்றன..

தமிழ் மொழி மூலமாக 443 ஆசிரியர்களும் தூய கணித பாடத்திற்கு 293 ஆசிரியர்களுக்கு கணினி தொழில் நுட்பத்துக்கு தொண்ணூத்தி எட்டு பேருக்கும் விஞ்ஞானத்திற்கு 52 பேருக்கும் வெற்றிடங்கள் காணப்படுகிறது..

ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்கு அப்பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நியதியை கல்வித்திணைக்களம் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாணத்தைப் பொறுத்தவரையில் 525 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்தார்..

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 63 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறுவிட்ட தமிழ் வித்தியாலத்தில் இரு மாடி கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்..

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 200 தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன.. அவற்றில் 525 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன..

ஏற்கனவே சபரகமுவா மாகாணத்தில் காணப்படும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பட்டதாரிகள் இடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தபோதும் 260 பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்தனர்..

இதனால் மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களை முழுமையாக நிரப்ப முடியாமல் உள்ளது. போதிய அளவு தமிழ் மொழிமூல பட்டதாரிகள் இல்லாத காரணத்தினால் உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்களை மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. மத்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்..