பட்டதாரி பயிலுணர்களுக்கு செய்தி..-important notice for graduate trainees

தற்போது நாட்டின் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி பயிலுனர் களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கல்வி அமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது..

இந்த சுற்று நிருபத்தில் காணப்படுகின்ற விடயங்கள்..

தற்போது பயிற்சி நிலையிலுள்ள பட்டதாரிகளை நாட்டில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அமைச்சரவையில் ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது..

நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை நியமனக் கடிதம் வழங்கப்படாது அனைத்து நியமனங்களின் பிற்போடுவதற்கு அமைச்சரவை தீர்மானம் 30 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது..

எனவே பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும்  நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரையில் மாகாண சபைகளில் நிலவுகின்ற அனைத்து வெற்றிடங்களுக்கு மான நியமனங்களை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டுமென அனைத்து மாகாண ஆளுநர்கள் வேண்டுகோள் விடுக்குமாறு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது..

மேலும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது அனைத்து மாகாணங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற ஆசிரியர் நியமனங்களை நிறுத்துமாறு கல்வியமைச்சின் செயலாளருக்கு வாய் மூலமான அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது..

மேற்படி அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தங்களது மாகாணங்களின் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் கான நியமனம் வழங்குகின்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்குமாறு அன்புடன் கோரப்படுவதாக குறித்த சுற்று நிருபத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே தென் மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற தமிழ் மொழிமூல மற்றும் சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றி இடங்களுக்கான விண்ணப்பம் கோரல் தற்காலிகமாக நேற்று இடை நிறுத்தப்படுவதாக அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்தது..

மேற்படி விடயத்தின் அடிப்படையில் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு அவர்களுக்கான முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே அனைத்து மாகாணங்களிலும் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றைய தரப்பினருக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

பட்டதாரிகளின் நியமனங்கள் முழுமையடையும் வரை வேறு எந்த நியமனங்களும் வழங்கப்பட மாட்டாது என்பதுடன்.. ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டு இதுவரையில் நியமன கடிதம் வழங்கப்படாத நியமனங்களும் இடைநிறுத்த படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. 

தென் மாகாண சபையில் ஆசிரியர் நியமனம் இடைநிறுத்தப்பட்டது தொடர்பான அறிவித்தலை பார்வையிட கீழே கிளிக் செய்யவும்..