All Island Essay and Art Competitions for School Children-Srilanka diabetes Federation
இலங்கை நீரிழிவு சம்மேளனம் மற்றும் இலங்கை அகம்சுரக்கும் தொகுதி நிபுணர்களின் கல்லூரி இணைந்து நடத்தும் அகில இலங்கை ரீதியில் ஆன மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி..
உலகம் முழுவதும் நோய் பரவல் உடன் போராட வேண்டி இருக்கும் இந்த தருணத்தில் 2021 மிகவும் சவாலான வருடமாக காணப்படுகின்றது. அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் இருப்பதால் நமது வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இதனால் நமது ஆரோக்கியம் கேள்விக்குறியாகி பலவகையான நோய்களுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.. எனவே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எதிர்காலத்தில் நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஊடாக கோவிட் 19 மற்றும் நீரிழிவு என்பவற்றை தோற்கடிப்போம் என்ற கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நடத்தப்படுகின்றது.
CLOSING DATE- 20.10.2021
போட்டிக்கான பரிசு விவரங்கள்
முதலாவது பரிசு ரூபாய் 25000
இரண்டாவது பரிசு ரூபாய் 15,000
மூன்றாவது பரிசு ரூபாய் 10,000
போட்டிக்கான விதிமுறைகள்
போட்டிக்கான நோக்கம்
நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கோவிட் 19 நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள முடியுமான விடயங்கள்
ESSAY AND ART TITLE – ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஊடாக கோவிட் 19 மற்றும் நீரிழிவு என்பவற்றை தோற்கடிப்போம்
வயது மட்டங்கள்
கனிஷ்ட பிரிவு- 2022 ஜனவரி முதலாம் திகதிக்கு வயது 5 முதல் 10 வரை
இடைநிலைப் பிரிவு- 2022 ஜனவரி முதலாம் திகதிக்கு வயது11 முதல் 15 வரை
உயர்நிலைப் பிரிவு – 2022 ஜனவரி முதலாம் திகதிக்கு வயது 16 முதல் 18 வரை
கட்டுரைக்கான சொற்களின் அளவுகள்
கனிஷ்ட பிரிவு- -250 சொற்கள்
இடைநிலைப் பிரிவு – ஆயிரம் சொற்கள்
உயர்நிலைப் பிரிவு – 1500 சொற்கள்
விண்ணப்பிக்கும் விதிமுறை
சித்திரங்கள் மற்றும் கட்டுரைகள் என்பன பூரண படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் srilankadiabetesfederation@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்..(பதிவின் இறுதியில் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது)
கட்டுரைகள் கையெழுத்தில் எழுதப்பட்ட அதனை படமெடுத்த அல்லது ஸ்கேன் செய்தோ அல்லது தட்டச்சு செய்தோ அல்லது pdf வடிவில் அல்லது jpg வடிவில் அனுப்பி வைக்கலாம்.. கட்டுரையை தமிழ் சிங்களம் ஆங்கிலம் எந்த மொழிகளிலும் எழுத முடியும்..
சித்திரங்கள் A3 அளவிலான தாளில் வரைந்து அதனை படம் எடுத்து அல்லது ஸ்கேன் செய்தோ அல்லது பிடிஎஃப் வடிவில் அல்லது jpg இவில் அனுப்பி வைக்க வேண்டும்.. சித்திரம் வரைவதற்கு எந்தவிதமான ஊடகங்களையும் பயன்படுத்த முடியும்..
உங்கள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள் ஆக அமைய வேண்டும் என்பதுடன் அடுத்தவர்களின் ஆக்கங்களாக இருக்கக் கூடாது..
கட்டுரை சித்திரம் என்பன தலைப்புக்கு அமைவாக அமைய வேண்டும் என்பதுடன் தலைப்புடன் தொடர்பில்லாத ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்..
APPLICATION FORM ?????