CIRCULAR OF TEACHER SALARY ISSUE -BY MINISTRY OF EDUCATION

CIRCULAR OF TEACHER SALARY ISSUE SOLUTION-BY MINISTRY OF EDUCATION

ஆசிரியர்கள் அதிபர்களுக்கான கொடுப்பனவு பிரச்சனை தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு சுற்றுநிருபம்  2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது..

2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அமைவாக நியமிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு குழுவின் சிபாரிசுக்கு அமைய 2021 நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தின் போது அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சம்பளம் முரண்பாட்டினை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது..

அதுவரையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக ரூபாய் 5000 வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன் கடமையில் ஈடுபடுகின்ற அதிபர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஆசிரியர் சேவை அதிபர் சேவை மற்றும் ஆசிரிய ஆலோசகர் சேவை என்பவற்றை வரையறுக்கப்பட்ட சேவை ஆக்குவதற்கான விதிமுறைகளை வழிப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2021 நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெளியிடுவதற்கும் குறித்த விதிமுறைகளை 6 மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த கொடுப்பனவுகள் குறித்த ஆசிரியர் குறித்த காலப்பகுதியில் சேவை ஆற்றியுள்ளார் என்பதனை அதிபரினால் சான்றிதழ் படுத்தப்பட்டு வலயக்கல்வி காரியாலயத்தில் சமர்ப்பிப்பதன் பின்னரே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..