இலங்கை மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படும் கட்டுரை கவிதை பேச்சு வினாடி வினா மற்றும் சித்திரப் போட்டிகள்….
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் நடாத்தப்படும் இந்தப் போட்டியில் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்ற முடியும்..
நடைபெறும் போட்டிகள்
- சித்திரம்
- பேச்சு
- கட்டுரை
- கவிதை
- வினாவிடை
நீங்கள் எழுத வேண்டிய தலைப்புகள் தொடர்பான விபரங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..
பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் தரம் 9 10 11 வகுப்பு மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்..
18வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டுரை திறந்த போட்டியில் பங்குபற்ற முடியும்..
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும்.. ஏற்கப்படும் DATE 23 ஆகஸ்ட்2021 முதல் 12 செப்டம்பர் 2021 வரை
விண்ணப்பத்தில் நீங்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே போட்டி தகவல்கள் வழங்கப்படும் எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.
பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்..
- முதலாம் பரிசாக ரூபாய் 25000
- இரண்டாம் பரிசாக ரூபாய் 15,000
- மூன்றாம் பரிசாக ரூபாய் 10000
ரூபாய் 3000 வீதம் 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் மாவட்ட ரீதியிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
பேச்சு கட்டுரை கவிதை களுக்கு பின்வரும் தலைப்புகளில் ஒன்றை பயன்படுத்த முடியும்..
1.இலங்கையின் எதிர்கால தொழில் உலகை வெல்ல தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம்..
2.21ம் நூற்றாண்டு மற்றும் தொழில் வழிகாட்டலும்
3.கனவு காண்போம் ,திட்டமிடுவோம் ,வேலை உலகத்தை வடிவமைப்போம்
4.நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு
5.நாட்டிற்கு தொழில் வழிகாட்டுதல் சேவையின் முக்கியத்துவம்.