General Knowledge Examination on Environment-TNGO
பசுமை அமைதி விருதுகள் –சூழல் பொது அறிவுப் பரீட்சை—2021
கொரோனாப் பெருங் கொள்ளைநோய் இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழிவோம் என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்துள்ளது. இயற்கையை நாம் மென்மேலும் சூறையாடினால் கொரோனாப் பேரிடரைவிடப் பெரும் பிரளயத்துக்குள் உலகம் தள்ளப்படும் என்று ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்படியாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சையினை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
பரீட்சை இணையவழியூடாக 03.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரம் முன்னிரவு 7.00 மணி தொடங்கி 8.30 மணிவரை நடைபெறவுள்ளது.
100 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்ற முடியும்.
பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ் வழங்கப்படும். சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினால் ஆன பசுமை அமைதி விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.
சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம் பெற்றிருக்கும். இப்பரீட்சையில் இலங்கையை வசிப்பிடமாகக் கொண்ட எவரும் கலந்துகொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இலங்கைக்கு வெளியே வாழ்பவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக் கப்படுவார்கள்.
எனினும், இவர்கள் முதல் மூன்று பசுமை அமைதி விருதுகளுக்கும் உரித்துடையவர்களாகக் கருதப் படமாட்டார்கள்.
இப்பரீட்சைக்கு 27.09.2021இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள register என்பதை கிளிக் செய்து போட்டிக்கு உங்கள் பெயரையும் பதிவு செய்து கொள்ளுங்கள்..