Graduates Training period extended

Graduates Training period extended

பயிலுனர் பட்டதாரிகளில் பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதம் நீடிக்க நடவடிக்கை…

வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

பயிலுனர் பட்டதாரிகளாக இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் பரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் ஆறு மாதங்களுக்கு பயிற்சி காலம் நீடிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அத்துடன் வெற்றிடங்கள் நிலவும் துறைகளில் முன்னுரிமை குறித்த அடையாளம் காண்பதற்காக குழு ஒன்றை தெரிவு செய்வதற்கும் அதேபோல குழுவினால் அடையாளப் படுத்தப் படுகின்ற முறைகளுக்கு அமைவாக மாகாண சபை பிரதேச சபை மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்கள் என்பவற்றில் வெற்றிடத்திற்கு ஏற்ற பதவிகளை உருவாக்க மற்றும் பதவிகளுக்கும் உள்வாங்குதல் போன்றவற்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிகமாக நீட்டிக்கப்பட்டுள காலத்திற்கு அமைய 2022 வரை கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் என்பவற்றை வழங்குவதற்கான நிதியை ஒதுக்குவதற்கு அனுமதி பெறப்பட உள்ளது.

அதேபோல கல்வி அமைச்சு மற்றும் மாகாண  சபைகளின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் நிலவும் பாடங்களுக்கான வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பதினெட்டாயிரம் பெயரை பாடசாலையில் நினைப்பதற்கும் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டதாரிகள் 2020 செப்டம்பர் மற்றும் 2021 பெப்ரவரி ஆகிய மாதங்களில் பயிலுனர்கள் ஆக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஆகும்..பட்டதாரிகளில் 15 ஆயிரம் பேர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வருடம் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..