Important notice -Department of Examination

Important notice -Department of Examination

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், திணைக்களத்திற்கு வருகைத் தராமல், பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தரவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்திற்கோ அல்லது DOE என்ற திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியின் (Mobile Application) ஊடாகவோ பிரவேசித்து, பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பரீட்சைகள் திணைக்களத்தின் மொபைல் app இணை நீங்கள் டவுன்லோட் செய்யவில்லையெனில் அதைப் பெற்றுக் கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

2001 அல்லது அதற்கு பின்னரான ஆண்டுகளில் தோற்றிய க.பொ.த (சா/த) மற்றும் உயர்தரம் பெறுபேறுகளை இணைய வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2001ம் ஆண்டுக்கு முன்னராக பெறுபேறு சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) பரீட்சைகளுக்கான சுட்டெண்ணை, மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது..