INTERVIEW FOR NEW ADMISSION OF GARDE 01

INTERVIEW FOR NEW ADMISSION OF GARDE 01

முதலாம் தரத்திற்கு மாணவர்களைச்சேர்த்துக்கொள்வது தொடர்பான தீர்மானம் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடத்துக்கான முதலாம் தரத்திற்குமாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பாகமேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் கால வரையறைகளை கல்வி அமைச்சு திருத்தியமைத்துள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடத்தப்படவேண்டும்..

இந்த நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களின் உடைய பெயர் பட்டியல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்..

மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள்என்பவற்றை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிடிசம்பர் மாதம் 14 ஆகும். அவை தொடர்பான விசாரணைகள். டிசம்பர் 14 முதல் 28 ஆம் திகதிவரை நடைபெறவேண்டும்.

இறுதியாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் ஜனவரி 14ஆம் திகதி காட்சி படுத்தப் படவேண்டும்..

மேற்படி திருத்தங்கள் மாகாண வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நிலைமை காரணமாகவே குறிப்பிட்ட திகதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..