Qualification for enter A level

Qualification for enter A level

*உயர தர வகுப்பில் பிரவேசிக்க ஆகக்குறைந்த தகுதி என்ன தெரியுமா?*

2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அழகியல் பாடநெறி பரீட்சைக்காக தோற்றிய மாணவர்களை உயர் தர வகுப்பில் உள்வாங்குவதற்குத் தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கையை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில்,

அழகியல் பாடநெறி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஏனைய பாடங்களில் இரண்டு திறமை சித்தி அடங்களாக 05 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் திறன் ஆற்றல் படி நிலை 01தொடக்கம் 04 வரையிருக்குமாயின் அழகியல் பாடநெறி பரீட்சை பெறுபேறு வெளிவரும் வரையில் இந்த மாணவர்களுக்கு உயர் தர வகுப்பில் பிரவேசிக்க முடியும்.

எனினும் இதற்கமைவாக அழகியல் பாடநெறிக்கான பெறுபேறு வெளியிடுவதில் நிலவும் தாமதத்தின் காரணமாக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பாடசாலை ஊடாக மற்றும் தனிப்பட்ட ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 6 இலட்சத்து 22,351 பரீட்சாத்திகளில் 2 இலட்சத்து 36,053 பேர் அதாவது 75 சதவீதமானோர் (நுண்கலைப்பிரிவு மாணவர்கள் தவிர) உயர்தரம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.