Sagara Soba-2021 (Scenic Ocean)

Sagara Soba-2021 (Scenic Ocean)

இயற்கை காட்சி நிறைந்த சமுத்திரம் என்ற  அடிப்படையில் இலங்கை முழுவதும் மாணவர்களுக்கு இடையில் நடத்தப்படுகின்ற அகில இலங்கை நிகழ்நிலை கலை போட்டி..

இது 5 முதல் 18 வரையான பாடசாலை மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற முடியும்..

2017 இல் நடைபெற்ற குறித்த போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் அமைச்சரிடம் இருந்து மாணவி பரிசை பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை இதில் காண முடியும்..

குறித்த சித்திரப் போட்டிக்கான கருப்பொருள்

 கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் ,கடல் தாவரங்கள் ,கடல் புல்படங்கள், சூரியன் மறையும் காட்சி, கடற்கரை ,கடற்கரை சார்ந்த மனித செயற்பாடுகள் என்பவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் அவைகளையும் உள்ளடங்கிய அடிப்படையிலான கடல் சூழல்சார் வேறு ஏதாவது ஒரு கண்கவர் கண்காட்சி..

வயதின் அடிப்படையில் மாணவர்கள் நான்கு பிரிவுகளில் போட்டியிட முடியும்..

  • Kindergarten (5-7 Years)       
    Primary (8-10 Years)  
  • Junior (11-14 Years)            
  • Senior (15-18 Years)

குறித்த சித்திரங்களை இரண்டு விதங்களில் வரைந்து அனுப்ப முடியும்.

1. பொதுவான medium

இதற்கு crayon ,watercolor colour ,pencil போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

2.டிஜிட்டல் medium

Digital வகை  11 தொடக்கம் 14 வயது பிரிவு மற்றும் 15 தொடக்கம் 18 வயது பிரிவினர் மட்டுமே பங்குபற்ற முடியும்..

போட்டிக்கான பரிசு விபரங்கள் கீழ்வருமாறு

Age GroupCommon
1st Place 2nd Place 3rd Place
Kindergarten (Ages 5-7)Rs. 7500Rs. 5000Rs. 2,500
Primary (Ages 8-10)Rs. 10,000Rs. 7,500Rs. 5,000
Junior (Ages 11-14)Rs. 12,500Rs. 10,000Rs. 7,500
Senior (Ages 15-18)Rs. 15,000Rs. 12,500Rs. 10,000

..

போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

அனைத்து சித்திரங்களும் 35*45 cm அளவிலான தாளில் அமைய வேண்டும்..

போட்டியாளர்கள் தங்களது சித்திரங்களை வரைந்த பின்னர் jpg அல்லது JPEG வடிவில் ஸ்கேன் செய்து அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google form மூலமாக அனுப்பி வைக்கவேண்டும்..(லிங்க் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது).

கூகுள் படிவங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் குறித்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள pdf ஐ வாசிக்கவும்..

அனைத்து ஆக்கங்களும் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் சொந்தமாக இருக்க வேண்டும்..

ஒரே நபர் இரண்டு வகையான பிரிவிலும் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியாது.. உதாரணமாக பொதுவான மீடியம் அல்லது டிஜிட்டல் மீடியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்..

இலங்கை ஆமைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றுகின்ற அவர்கள் மற்றும் நடுவர்களின் நெருங்கிய உறவினர்கள் பங்குபற்ற முடியாது..

போட்டியாளர்கள் ஒக்டோபர் மாதம் 2021 அறிவிக்கப்படுவார்கள்..

மேலதிக தகவல்கள் ஏதும் தேவைப்படின் 0723279990 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வினவ முடியும்..(முக்கியமாக காலை 9 மணி முதல் பின்னேரம் 4 மணி வரை மட்டும் அழைப்பை மேற்கொள்ளவும்..) 

சித்திரங்களை அனுப்பும் கூகுள் form link கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

எவ்வாறு ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் கொண்ட pdf download செய்ய இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD