நாட்டின் தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை 2021
குறித்த பதவிக்கு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் நடத்தப்படும் எழுத்துமூல பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவர்.
தேவையான தகைமை –
ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சாதாரண தர பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாக சித்தி அடைந்து இருக்கவேண்டும்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மொழியை ஒரு பாடமாக கொண்ட பட்டம் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல் அல்லது குறித்த வெளிநாட்டு மொழியில் சிறப்பு பட்டம் பெற்றவர்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதிக்கு 18 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
சம்பள அளவு- රු. 27,740-300×6-380×7-445×2-රු.33,090/-
குறித்த பதவிக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்..
ஆன்லைன் மூலம் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனுடைய அச்சிடப்பட்ட பிரதியில் தேவையான இடங்களில் கையொப்பத்தை நிரப்பி பதிவு தபால் மூலமாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்..
“Commissioner General of Examinations,Institutional Examinations Organization Branch, Department of Examinations, Sri Lanka, P. O.Box 1503, Colombo”
பரீட்சை கட்டணமாக ரூபாய் 600 இணைய வழி மூலமாக வழங்கப்படும் முறைகளாக செலுத்தப்பட முடியும்.
- Bank debit card
- Bank credit card
- Bank of Ceylon online banking system
- Bank of Ceylon deposit machine
- Postal department payment at any post office