Trainee staff assistant vacancy. – sampath Bank 2021

Trainee staff assistant vacancy. – sampath Bank 2021

Sambath bank calling application from eligible candidates for training staff assistance from all over Island..

இலங்கையில் பிரபலமானதும் முப்பது வருடங்கள் சிறந்த வர்த்தக வங்கியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சம்பத் வங்கியில் உயர்தர தகைமை உடன் நாடு முழுவதும் Trainee staff assistant பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பித்தல் போதுமானது..

தேவையான தகைமைகள்

விண்ணப்பதாரியின் வயது 23 விட குறைவாக இருத்தல் வேண்டும்.

உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

சாதாரண தர பரீட்சையில் ஒரேஅமர்வில் கணித பாடம் உள்ளடங்களாக 5 திறமைச் சித்திகள்.

சாதாரண தர பரீட்சையில் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகளில் ஆங்கில பாடத்தில் திறமைச் சித்தி..

மேலதிக தகைமைகள்

விண்ணப்பதாரருக்கு கணினி தொடர்பான அடிப்படை அறிவும் ஆங்கிலம் பேசக் கூடிய திறமையும் இருத்தல் சிறந்தது..

குழுவாக சேர்ந்து வேலை செய்யும் திறமை.

குறித்த பதவி வெற்றிடங்களுக்கு நிரப்பப்படும் விண்ணப்பதாரர்கள் இரண்டு வருடங்கள் training அடிப்படையில் வேலை செய்ய வேண்டும்.. அதன்போது ஒரு சிறந்த கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும்.

இரண்டு வருடங்களின் பின்னர் junior executive ஆக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்..

குறித்த பதவிக்கு நீங்கள் 28ஆம் திகதி மே மாதத்திற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

குறித்த பதவிக்கு சம்பத் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்..வேறு எந்த வகையிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 1 . முதலாவதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்..

APPLY

2. கிளிக் செய்தவுடன் உங்களுக்கு இப்படி ஒரு திரை தோன்றும்.. இதில் அம்புக்குறி காட்டப்பட்டுள்ள view என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.

3. அடுத்ததாக இப்படி ஒரு திரை தோன்றும். இது விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். கீழே அம்புக்குறி காட்டப்பட்டுள்ள apply என்பதை கிளிக் செய்யுங்கள்..

4. கிளிக் செய்தவுடன் இறுதியாக ஒரு online application form தோன்றும்.. அதில் உங்கள் சுய விவரங்கள், நீங்கள் பெற்ற பரீட்சை பெறுபேறுகள், உங்கள் முந்தைய வேலை அனுபவங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்புங்கள்.. தவறான தகவல்கள் வழங்கப்படும் இடத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

குறிப்பு – HNB வங்கியின் Training BANK associate பதவிக்கு உயர்தர தகைமை உடன்.. விண்ணப்பிக்க முடியும்.. விண்ணப்ப முடிவுத் திகதி இன்னும் 5 (13.05.2021) நாட்களில் முடிவடைகிறது.. விண்ணப்பிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்  – APPLY

குறிப்பு – PEOPLES BANK வங்கியின் CUSTOMER SERVICE ASSISTANT பதவிக்கு உயர்தர தகைமை உடன்.. விண்ணப்பிக்க முடியும்.. விண்ணப்ப முடிவுத் திகதி 02.06.2021 முடிவடைகிறது.. விண்ணப்பிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்  – APPLY

முக்கிய குறிப்பு- உங்கள் ஈமெயில் முகவரி, தொலைபேசி இலக்கம், உங்கள் முகவரி என்பவற்றை ஒன்றுக்கு இரண்டு தடவை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தெரிவு செய்யப்படும் இடத்தில் உங்களை தொடர்பு கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை..