APPEALS FOR UNIVERSITY ADMISSION 2020/2021

APPEALS FOR UNIVERSITY ADMISSION 2020/2021

2020/2021 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் தங்களது சாதாரண அனுமதியின் கீழ் பரீட்சார்த்திகளின் பல்கலைக்கழக தெரிவு செய்முறை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அதில் காணப்படும் ஏதேனும் குறைபாடுகள் தொடர்பாக பரீட்சார்த்திகள் மேன்முறையீடு செய்வதற்காக ஒரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்குகின்றது..

மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் மேன்முறையீடுகள் பின்வருவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும். என்பதாக பல்கலைக்கழ கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிக்கு தெரிவுக்கென பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் ஆகக்குறைந்த புள்ளிகளைக் கொண்டிருந்தும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகள்.

2.குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிக்கு தெரிவுக்கென பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் ஒரு குறித்த கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டு, ஆனால் தாம் குறிப்பிட்ட வேறொரு கற்கை நெறிக்குத் தகுதியுடையவர்களெனக் கருதும் விண்ணப்பதாரிகள்.

3.அனுமதிக்கான தேவைப்பாடுகள் நிறைவேற்றியிருந்தால் தமது கற்கை நெறியை விண்ணப்பத்தில் குறைந்த விருப்புரிமையாக குறிப்பிட்ட இன்னொரு கற்கை நெறிக்கு மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கும் விண்ணப்பதாரிகள். (கற்கை நெறியின் மாற்றமொன்றுக்கான மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்க வேண்டுமாயின், குறிப்பிட்ட கற்கை நெறியில் வெற்றிடங்கள் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு விண்ணப்பதாரிகள் இருந்தால் மாணவர்களின் z புள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)

நீங்கள் விருப்பத்தெரிவாக குறிப்பிட்ட பாடநெறிகளில் தெரிவு செய்யப்பட்டபாடநெறிக்கு அடுத்து வருகின்ற பாடநெறிகளில் ஒன்றை விரும்புகின்ற போதுஅதற்காக நீங்கள்மேன்முறையீடுசெய்யலாம்.

4 குறித்த கற்கைநெறிக்கு விண்ணப்பிக்காத, அந்த கந்கைநெறிக்கான அனுமதிக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள். (இந்தப் பிரிவில் மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்கவேண்டுமாயின் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு மேன்முறையீட்டாளர்கள் இருந்தால் மாணவர்களின் Z புள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)

மேன்முறையீடு செய்ய விரும்புவோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் கொடுக்கப்பட்டுள்ள மேன்முறையீடு விண்ணப்ப படிவத்தை நிரப்பி கீழ்வரும் முகவரிக்கு வெட்டுப்புள்ளி வெளியாகி நான்கு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்..

நான்கு வாரங்களுக்குள் அனுப்பவேண்டும் என்ற வகையில் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது . எனவே சமர்பிப்பதற்கான இறுதித் திகதி நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆகும்..

அனுப்ப வேண்டிய முகவரி

Senior Assistant Secretary, Appeals Committee on University Admissions, C/o University Grants Commission, No, 20, Ward Place, Colombo 07

என்ற முகவரிக்கு பதிவுத் தபால்மூலம் அனுப்ப வேண்டும்.

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் appeals-university admission எனக் குறிப்பிட வேண்டும்..

ஒவ்வொரு மேன்முறையீட்டிற்கும் ரூபா 500/- கொடுப்பனவு செய்யப்பட வேண்டும். கொடுப்பனவுப் பட்டோலையை நிரப்பி, இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் இலங்கை வங்கியின் சுதந்திரச் சதுக்க கிளையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள். ஆணைக்குழுவின் திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287 இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டும். கணக்கு இலக்கம் 3169407இன் வரவிற்கு இக்கொடுப்பனவு செய்யப்பட வேண்டும்.

மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய download என்பதை click செய்யவும்.