2022ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல்

2022ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் விண்ணப்ப படிவம் வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் அல்லது அந்த மாணவரின் பாதுகாவலர்கள் பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னர் கையளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தபால் மூலம் அனுப்பும்போது பதிவுத் தபால் மூலம் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு கல்வியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

.2022 January 31 ஆம் திகதி ஆகும் பொழுது .மாணவர் கட்டாயமாக ஐந்து வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்..அதனை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 31ஆம் திகதி 6 வயது அல்லது அதற்கு அதிகமான வயதை கொண்ட மாணவர்களை தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்வது 6 வயதுக்கு குறைவான மாணவர்களைக் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

முதலாம் தரத்திற்கு நேர்முகப் பரீட்சையின் ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட முடியும்.. அதேவேளை ஒப்பனை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் 5 பேரை இணைக்க முடியும்..

எனவே மொத்தமாக வகுப்பறை ஒன்றில் 40 மாணவர்களை வரை இணைத்துக்கொள்ள முடியும்..

கீழே உள்ள லிங்க் இல்  கொடுக்கப்பட்ட ஆலோசனை PDF ஐ டவுன்லோட் செய்து அதனை உன்னிப்பாக வாசித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..??????