A decision has been taken to prioritiZe school teachers for vaccination against covid-19 at a meeting held with his excellency the president..
நீண்ட நாட்களாக நாட்டில் நிலவும் தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி செயல்பாடுகளை தடையின்றி தொடர்வதற்காக முதல் கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளது..
இதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும்ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது..
சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பின்வரும் தடுப்பூசி செயற்றிட்டத்தை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
தற்போதைக்கு ஆசிரியர்களுக்கு அடுத்ததாக சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி முதற்கட்டமாக தடுப்பூசிகளை மிக விரைவில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த வருட இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.