உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற 2020 ஆண்டுக்குரிய உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியில் உள்ளது..

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய பரீட்சை கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டது..

அதாவது அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பரீட்சை நடைபெற்றது..

 குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் ஒருசில தினங்களில் குறிப்பாக இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

3 லட்சத்து 62 ஆயிரத்து 124 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வருடத்துக்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பன அக்டோபர் மாதம் வரையும் சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.