இலங்கை வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவசர அறிவிப்பு
தவறுதலாக 6 இலக்கங்களை கொண்ட தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து உங்கள் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அல்லது உங்கள் கையடக்க தொலைபேசிக்கு ஒரு தகவல் கிடைக்கும் ஆக இருந்தால் அதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்க வேண்டாம் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது..
இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அது தொடர்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமக்கு அறிந்த ஒருவரின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து இந்த தகவல் கிடைக்கும் ஆக இருந்தால் அந்த தகவலானது குறித்த நபர் அறியாத வகையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
இதனால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கை பாதுகாத்துக் கொள்வதற்கு 2 factor authentication செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..
எப்படி WHATSAPP ல் 2 step security ஐ செயல்படுத்துவது என்பதை அறிந்துகொள்ள இங்கு அழுத்தவும்- READ