கட்டாயமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நாட்டின் தற்போதைய கட்டுப்பாட்டு நடைமுறைகள்..

பயணக் கட்டுப்பாடுகள்

13ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை..

மீண்டும் திங்கட்கிழமையில் இருந்து அதாவது 17 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை நான்கு மணிவரை பயணத் தடை அமுலில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்..

குறிப்பிட்ட கால எல்லையில் மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பு ஊசியைப் பெறுவதற்காக பயணிப்பதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையிலான பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளில் அடங்குபவை

சுகாதார சேவைகள்

பொலிசார்

படையினர்

அரசு அதிகாரிகளின் அத்தியாவசிய பயணங்கள்

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம்

குடும்பத்தில் நெருங்கிய உறவினரின் மரண சடங்கு..

வெளிநாட்டு பயணம்

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப உள்ளவர்கள்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சேவைகள்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து வேறு காரணங்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.குறுக்கு வழிகளை பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்..

இன்று அதாவது 13ஆம் திகதி முதல் அடையாள அட்டையின் இறுதி எண்கள் அமைய வீடுகளில் இருந்து வெளியில் செல்லும் நடைமுறை அமுல் படுத்தப் படுகிறது..

வெளியே செல்லும் போது கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை இலங்கையர்கள் வைத்திருப்பது முக்கியமானது..அப்படி இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 2,4,6,8,0 ஆகிய இரட்டை இலக்கங்கள் ஆக இருந்தால் இரட்டை இலக்க நாட்களில் மட்டுமே நீங்கள் பயணிக்கலாம்..

தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை இலக்கங்கள் ஆக இருந்தால் ஒற்றை இலக்க நாட்களில் மட்டுமே நீங்கள் பயணிக்கலாம்..

வீடுகளில் மரண சடங்கு 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் மரண வீடுகளில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

எதிர்வரும் 31ஆம் திகதிவரை யாத்திரைகள் சுற்றுலாக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிவரை திருமண நிகழ்வுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது..எனினும் திருமண பதிவுகளில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.

மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு ரெண்டு பேர் மாத்திரமே பயணிக்கலாம்.

பொதுப் போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கை களுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி

Seminar , மாநாடுகளுக்கு அனுமதி இல்லை..

மிக முக்கியமான அவசிய கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப் படுத்தப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம் 

சில்லறைக் கடைகள் பல்பொருள் அங்காடிகள் கடைத் தொகுதிகள் சந்தைகள் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானவர்கள் மட்டுமே அனுமதி.

பேக்கரி வீதியோரக் கடைகள் அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானவர்கள் மட்டுமே அனுமதி.

பராமரிப்பு நிலையங்கள் பாலர் வகுப்புகள் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் தனியார் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் வெளிநாட்டவர்கள் ராஜதந்திரிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்..