மேலும் ஒரு லட்சம் பேருக்கு அரச நியமனங்கள் விரைவில் வழங்கப்படும். ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.

Print

மேலும் ஒரு லட்சம் பேருக்கு அரச நியமனங்கள் விரைவில் வழங்கப்படும். ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.

இருபதாம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மேலும் ஒரு லட்சம் பேருக்கு அரசு தொழில் நியமனங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து ஒரு லட்சம் பேருக்கான அரச நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 35,000 பேருக்கு ஏற்கனவே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு லட்சம் பேருக்கு நியமனங்களை மிக விரைவில் வழங்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத் திட்டத்திற்கு இளைஞர்களை தெரிவு செய்யும்பொழுது சரியானவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு கிராம அதிகாரிகளினதும் அரச அதிகாரிகளனது பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயிற்றப்பட்ட ஊழியர்கள் குறைவாக இருப்பதால்தான் அபிவிருத்தி திட்டங்கள் தாமதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மிக விரைவில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் அது தொடர்பான முழு தகவல்களும் நமது வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிரப்படும்.

நமது வேலை வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை வழங்கும் வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் –  JOIN HERE

விரைவில் 2000 கிராம சேவை உத்தியோகர்தகளுக்கு  வேலைவாய்பு – மேலும் வாசிக்க