Election voter list Registration 2021
இந்த முறை நோய்த்தொற்று நிலைமை காரணமாக வீடுகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் விநியோகிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..
எனவே பொதுமக்கள் நாட்டின் கடமையை சரியாகச் செய்வதற்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயமானது.. எனவே 2020 வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.. அவ்வாறு பெயர் இருக்கும் பட்சத்தில் தன்னியக்க முறையில் அவர்களின் பெயர் 2021 வாக்காளர் இடாப்பில் பதியப்படும்.குறித்த பெயர் காணப்படும் நபர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது..
ஆன்லைன் மூலமாக உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்..- CLICK HERE
ஒருவேளை உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை எனில் 2021 செப்டம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கிராம அலுவலரிடம் ஒப்படைக்க முடியும்..
விண்ணப்ப படிவத்தை கிராம அலுவலரிடமிருந்து அல்லது ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்ய முடியும்.
குறித்த படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..– DOWNLOAD
குறிப்பு – உங்கள் பெயரை விண்ணப்ப படிவம் மூலமாக மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.. ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் – CLICK HERE
.