Important notice for university students English
அனைத்து அரச பல்கலைக்கழக மாணவர்களுக்குமான U.G.C யின் முக்கிய அறிவித்தல்.
20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் தற்போது தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது.. எனினும் பல்வேறு இளைஞர்கள் குறிப்பாக படித்த அதாவது பல்கலைக்கழகங்களில் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பல இளைஞர்கள்,யுவதிகள் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் அடிப்படையில் ஒரு சில குறிப்பிட்ட தடுப்பூசிகளை மட்டும் எதிர்பார்த்து தற்பொழுது தடுப்பூசியை செலுத்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது..
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது..
20-30 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் தாக்கத்தில் குறிப்பிட்ட தடுப்பூசியைக் எதிர்ப்பார்த்து இருக்காமல் கிடைக்கும் தடுப்பூசி போடுமாறு U.G.C இன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறைந்தது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நவம்பரில் பல்கலைக்கழகங்களில் தொடங்கவும் எதிர்ப்பார்த்துள்ளது.
இதுவரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் இந்த விஷயம் குறித்து சுகாதார அமைச்சுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும். மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவுடன் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் கல்விப் பணிகளை விரைவில் தொடங்குவதற்காக தடுப்பூசி போடப்பட்ட இளங்கலை பட்டதாரிகளின் தகவல்களைச் சேகரிக்குமாறு அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு U.G.C அறிவுறுத்தியுள்ளது.