Important notice of Health ministry

முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் இலங்கையில் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக அச்சத்தை உண்டாக்கி உள்ளது..

கோவிட் வைரஸ் தொற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டது..

புதிய சுகாதார வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு – New guidelines by Ministry of health

1.மாநாடுகள் செயலமர்வுகள் கூட்டங்கள் மதிய நேர விருந்து உபசாரங்களில் நடத்துவதற்கு மே மாதம் 21ஆம் திகதி வரை தடை..21ஆம் திகதிக்கு பின்னர் கோவில் நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு மீளவும் சொல்லப்படும்..

2.பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிரம்மாண்ட விற்பனை நிலையங்கள் நிதி நிறுவனங்கள் ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்கள் ஆகியன முழு அளவில் 25 வீத அளவுடன் செயல்படமுடியும்..

3.பொதுமக்கள் ஒன்று கூட கூடிய வகையில் கூடிய இடங்கள் மற்றும் திறந்த வெளிகளில் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் தடை..

4. எந்த ஒரு மத தளத்திலும் பொதுமக்கள் மத ரீதியான அல்லது பொதுவான ஒன்றுகூடல் களை மேற்கொள்ள கூடாது..

5.திரையரங்குகள் சிறுவர் பூங்காக்கள் நீச்சல் தடாகங்கள் மற்றும் பார் இரவு நேர களியாட்ட விடுதிகள், பந்தய நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன..

6. ஹோட்டல்கள் மற்றும் வாடகைக்கு ரூம் வழங்கும் இடங்கள் தங்குமிடங்கள் ஆகியன 50 வீதமானவர்களை அனுமதிக்க முடியும் என்பதுடன் இரவு 10 மணிக்குப் பின்னர் செயற்படக் கூடாது..

7. கார்னிவல், இசை நிகழ்ச்சிகள், போன்றவை நடத்த தடை..

8.திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை பேக்கரி ஆகியன முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9.நீதிமன்றம் முழு அளவில் 25 வீத மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்பதுடன் மக்கள் வருகை தர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

10. சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை உறவினர்களோ அல்லது நண்பர்களோ பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

11.பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் தனியார் வகுப்புக்கள் என்பன மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

மே மாதம் 4ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி கிடையாது அதன் பின்னர் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு செய்யப்படும்..

குறித்த சுகாதார வழிகாட்டியை பின்பற்றுவது இலங்கை குடிமக்களாகிய நாம் அனைவரினதும் கடமையாகும்.. மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..