ஒரு லட்சம் காணி துண்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி

ஒரு லட்சம் காணி துண்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய செய்தி..முடிந்தால் இதற்கு விண்ணப்பித்த உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இலங்கை முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நாம் அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தோம்..கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வடகிழக்கிலிருந்து மட்டும் அனுப்பப்பட்டதாக அறிய முடிகிறது..

தற்போது அந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட பலருக்கு வந்துள்ள அழைப்புக் கடிதத்தில் திட்ட முன்மொழிவு சம்பந்தமான விபரங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது..

விண்ணப்பித்த உள்ளோரின் கவனத்திற்கு…

ஒரு ஏக்கர் அல்லது ஒரு ஏக்கரை விட குறைவான காணிக்கை பதிவு செய்தவர்களில்  தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத்தேர்வுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்..

அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் கொன்றேன் மூலப்பிரதி மற்றும் நிழல் பிரதி

வதிவிட உறுதிப்படுத்தல்.. கிராம உத்தியோகத்தர் மூலமாக பெறலாம்..

சத்தியக் கடதாசி இணை விண்ணப்பதாரியின் பெயரில் அதாவது எந்த விதமான காணியும் அவருக்கு சொந்தமாக இல்லை என உறுதிப்படுத்துதல்.

ஏற்கனவே குறித்த தொழில் மேற்கொள்வோர் மற்றும் அனுபவம் உள்ளோர் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இணைக்க வேண்டும்..

உங்கள் கருத்திட்டம் தொடர்பான அறிக்கையை தயாரித்தல்..

இந்த நேர்முகத் தேர்வுகளை எவ்வாறு கையாளவேண்டும்?

முதலில் திட்ட முன்மொழிவு பற்றி சற்று பேசலாம்.. மேற்படி திட்டத்தின் பிரகாரம் விண்ணப்பதாரிகளுக்கு 2 ஏக்கர் வரையான காணிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது..

குறித்த காணிகள் நீங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து அதிக தூரத்தில் கூட கிடைக்கலாம்..அப்படி கிடைக்கக்கூடிய காணிகளை புதர்களை வெட்டி முழுமையாக சுத்தப்படுத்தி பதப்படுத்தி உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சற்று கடினமாகவும் இருக்கலாம்.

ஏராளமான திட்டங்களை செய்வதற்கான முனைப்பு உங்களிடம் இருந்தாலும் அதனை எல்லாராலும் செயற்படுத்த முடியாது அல்லவா?

காரணம் இவை அனைத்தும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் சொந்த வசதிகள் சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார பலம் என்பதை பொருத்து அவர்களின் திட்டங்களும் வேறுபடலாம்..

உங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை முன்மொழிய முயற்சி செய்யுங்கள்.. மற்றவர்கள் செய்ய முன்மொழியும் திட்டத்தை நீங்களும் முன்மொழிய முயற்சிக்காதீர்கள்.. விரும்பியதை செய்யும் போது தான் உங்களுக்கு ஒரு சந்தோஷமும் உற்சாகமும் கிடைக்கும்..

நேர்முகத் தேர்வை எவ்வாறு கையாள்வது என்பதைப் பார்க்கலாம்..உங்களுடைய நோக்கம் காணியை பெற்று அதை உண்மையில் உற்பத்திக்கு பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.அதை வெறுமனே பெற்று விட்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒரு திட்டமும் இன்றி நேர்முகத்தேர்வுக்கு நீங்கள் சென்றால் நிச்சயமாக உங்கள் வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும்..

நீங்கள் உண்மையிலேயே ஒரு உற்பத்தி தொடர்பான அறிவுடனும் ஒரு திட்டத்துடன் இருந்தால் தான் உங்களால் ஒரு சிறந்த திட்ட முன்மொழிவை செய்ய முடியும்..அப்படி இல்லாவிட்டால் நிச்சயமாக நேர்முகத் தேர்வில் நீங்கள் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்..

முதலில் இத்திட்டத்தை நீங்கள் காணியை எவ்வாறு படுத்த போகிறீர்கள் என்பதில் ஆரம்பிக்க வேண்டும்.. உதாரணமாக உங்கள் காணியை திருத்தி எடுப்பதற்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

இறுதியாக உங்கள் உற்பத்திகளை இவ்வாறு சந்தை படுத்த போகிறீர்கள் என்பது வரை தெளிவான விளக்கத்துடன் உங்கள் திட்ட முன்மொழிவை உருவாக்குங்கள்..

மற்றும் உற்பத்தி செய்வதில் நீங்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன அவற்றை எவ்வாறு வெற்றி கொள்வீர்கள் என்பதைக்கூட நீங்கள் குறிப்பிட வேண்டும்…

Nishanthi Prabakaran அக்கா மற்றும் அவரது உத்தியோகத்தர்களின் உழைப்பில் உருவாகிய பல்வேறு பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள், விளக்கங்களின் இணைப்பை கிழே இந்த பதிவின் இறுதியில் தொகுத்துள்ளேன்.உங்களுக்கு விருப்பமான இணைப்பை கிளிக் பண்ணி தேவையான விபரங்களை சேகரித்து உதாரணங்களை பயன்படுத்தி உங்கள் சொந்த திட்ட முன்மொழிவுகளை உங்கள் கையெழுத்திலேயே எழுதி நேர்முகத்தேர்வுக்கு எடுத்துச் செல்லலாம்.

உங்களை நேர் காண்பவர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகவே அல்லது காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆக இருக்க வாய்ப்பு உண்டு.உங்கள் மன உறுதியும் விரிவான திட்டத்தை சாத்தியப்பாடு மட்டுமே இந்த நேர்முகத் தேர்வில் அதிகம் பரிசோதிக்கப்படும்..

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கப் போகும் ஒவ்வொரு துண்டு காணி போலவும் ஏதோ ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் வளரும் அவ்வாறு பல குடும்பங்கள் வளரும் போது நிச்சயமாக எமது சமூகமும் நாட்டின் பொருளாதாரமும் வளரும்..

உங்கள் நண்பர்களுக்கும் சரியான திட்டம் முன்மொழிவை செய்வது பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்கள்..

செயற் திட்ட முன்மொழிவுகளின்(Project Proposals) தொகுப்பு:நிதி கணக்கு அட்டவணை தனி pdf உண்டு நான் ஒரு மாதிரி அட்டவணை இன்று அல்லது நாளை இணைக்கின்றேன். அதே போல் அவரவர் காணிஅளவு ,பயிர் எண்ணிக்கைகளுக்கு ஏற்றபடி நீங்களே எழுதி கொள்ளுங்கள்.5 ஏக்கர் நிலத்தில் திட்ட முன் மொழிவு சுருக்கம் இந்த லிங்கில் உண்டு

LINKdownload

பல திட்ட முன்மொழிவுகளை நேர்முகத்தேர்வு விபரங்களை உள்ளடக்கிய இந்த பதிவை சம்பந்தப்ட அனைவருக்கும் கிடைக்க பகிர்ந்து உதவுங்கள். இந்த திட்டத்தின் வெற்றியில் பங்கு கொண்டு உழைக்கும் உதவும் அத்தனை நெஞ்சங்களுக்கும் மனமார்ந்ந நன்றிகளும் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
நன்றி
திருநாவுக்கரசு தயந்தன்

இந்த பதிவு மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்..