Apply now for the Bachelor of Fine Arts (BFA) Honours in Music, Dance, Drama, and Visual Arts at SVIAS, Eastern University for the 2025/2026 academic year. Online applications close on May 13, 2026. Get all details and application links here.
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம்
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை
கற்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள் / இசை / நடனம் / நாடகம் மற்றும் அரங்கியல் ஆகிய இளங்கலை கௌரவப் பட்டங்களுக்கான மாணவர்களைத் தெரிவு செய்யும் விசேட திறமைச் சோதனை / செயன்முறைப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- 2025 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றிருத்தல்.
- குறிப்பிட்ட பாடத்தில் குறைந்தபட்சம் திறமைச் சித்தி (C) மற்றும் ஏனைய இரு பாடங்களில் சாதாரண சித்தி (S) பெற்றிருத்தல் வேண்டும்.
- பரீட்சை தமிழ் மொழியில் மாத்திரமே நடைபெறும்.
இணையவழி விண்ணப்பத்தின் பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, திறமைச் சோதனை நடைபெறும் நாளன்று உதவிப் பதிவாளர் / பரீட்சைகள் கிளைக்கு நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் . விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6 (1) க்கான அறிவுறுத்தல் விண்ணப்பத்துடன் பரீட்சைக் கட்டணம் செலுத்தியதற்கான உறுதிப்படுத்தல் சீட்டு (paying-in-voucher) இணைக்கப்பட வேண்டும்.
| இசை / நடனம் / நாடகம் | ரூபா 1000/- |
| கற்புல மற்றும் தொழில்நுட்பக் கலைகள் | ரூபா 1500/- |
விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6 (2) க்கான அறிவுறுத்தல்
க.பொ.த (உயர்தர) பரீட்சை சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதிகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். அனைத்து பிரதிகளும் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம்.
விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6 (3) க்கான அறிவுறுத்தல்
விண்ணப்பத்தில் உள்ள பெயருக்கும் சான்றிதழ்களில் உள்ள பெயருக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், விண்ணப்பதாரர்கள் அவை ஒருவரையே குறிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தி ஒரு சத்தியக்கடதாசியைச் (Affidavit) சமர்ப்பிக்க வேண்டும்.
✅ அனுமதித் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் பரீட்சை நடைபெறும் திகதி மின்னஞ்சல் (e-mail) மூலம் அறிவிக்கப்படும்.
✅ பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியற்ற ஆனால் 2025 உயர்தரப் பெறுபேறுகளை மீளாய்வு (re-scrutiny) செய்ய விண்ணப்பித்துள்ள மாணவர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தத் திறமைச் சோதனைக்கு விண்ணப்பிக்கலாம்.