விண்ணப்ப முடிவுத் திகதி மே 17 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..
BIT external degree programme 2021 intake-school of computing colombo university
2020 ஆண்டிற்கான கற்கைநெறி ஆள்சேர்ப்புக்கான அழைப்பு கோரப்பட்டுள்ளது. இது தொழில் நுட்பவியல் சார்ந்த பாட உள்ளீடுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக 30 கிரெடிட் கிரடிட் அளவுகளை ஒவ்வொருவரிடமும் தெரிவு செய்ய வேண்டும். சில பாடநெறிகள் கட்டாயப் பாடமாகவும் சிலது விருப்பு பாட நெறிகளாகும் அமையும்.
BIT கற்கைநெறி தொழில்நுட்பம் சார்ந்த இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கற்கை நெறியாகும்.
குறித்த பாடநெறி கான அப்ளிகேஷன் ஃபார்ம் registration.bit.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
முதல் இரண்டு வருடங்களும் அனைத்து பாடங்களும் கட்டாயப் பாட நெறிகளாக அமைவதோடு மூன்றாம் பருவம் தெரிவு பாடநெறிகள் ஆக அமைகிறது. இந்த கற்கை நெறி இரண்டு விதமான மதிப்பீடுகளை கொண்டுள்ளது ஒன்று online assignment மற்றது physical examination.
✓ விண்ணப்ப படிவத்தில் உங்கள் கையொப்பம் இட்டு அத்தகைய பத்தில் முத்திரை இட்டு பின்வரும் நபர்களால் சாட்சியம் வைத்திருக்க படல் வேண்டும்.
Retired Head of a Government/Director Managed approved school, Grama Niladhari of the Division, Justice of Peace, Commissioner of Oaths, Attorney at Law, Notary Public, Commissioned Officer of the armed forces, Staff Officer of Govt. / Corporation, the Chief Incumbent of a Buddhist Vihara, A religious Dignitary of standing of any other religion.
✓ பிறப்புச் சான்றிதழில் உள்ள வாறான உங்கள் முழு பெயரை குறிப்பிட வேண்டும்.
✓ உங்கள் நிரந்தர வதிவிட விலாசம் குறிப்பிடப்பட வேண்டும்.
✓ உங்கள் கல்விசார் தகுதிகள் உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
✓ முடிவு திகதிக்கு முன்னர் உங்கள் அனைத்து சான்றிதழ்களும் சமர்ப்பிக்கபட வேண்டும். நீங்கள் 2009ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி உங்களுக்காக காத்திருக்கும் மாணவர்கள் ஆயின் முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுக்கு முதல் உங்கள் மதிப்பீடு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
✓ இலங்கை பிரஜையாக இருந்தால் 1500 விண்ணப்ப கட்டணம் வெளிநாட்டுப் பிரஜை அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட் உரிமையாளர்களும் இருந்தால் 4500 விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
பூரண படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் பின்வரும் விலாசத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்ப பட வேண்டும்.
Assistant Registrar,
External Degrees Centre,
University of Colombo School of Computing,
No.35, Reid Avenue,
Colombo 00700,
✓ பூரண படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடன் பின்வரும் கோப்புகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தேசிய அடையாள அட்டை (இலங்கை மாணவர்கள்)
*பாஸ்போர்ட் (வெளிநாட்டு மாணவர்கள்)
*சாதாரண தர சான்றிதழ்
*உயர் தர சான்றிதழ்
*திருமணம் ஆகி இருப்பின் திருமணச் சான்றிதழ்
- உறுதிப்படுத்தல் படிவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (Affidavit)
*கட்டணம் செலுத்தியது உறுதிப்படுத்தும் பேங்க் வவுச்சர் ஸ்லிப் (Bank voucher slip)
நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE
Leave a Reply