DEGREE PROGRAMMES FOR OFFICER CADETS (FULL TIME)(2021/2022)-GENERAL SIR JOHN KOTELAWALA DEFENCE UNIVERSITY

DEGREE PROGRAMMES FOR OFFICER CADETS (FULL TIME)(2021/2022)-GENERAL SIR JOHN KOTELAWALA DEFENCE UNIVERSITY

உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு..

பட்டப்படிப்பு மாணவர்கள் மாதாந்தம் ரூபாய் 40,000  சம்பளம் மற்றும் அதற்கு மேல் அதிகமாக

உணவும் தங்குமிட வசதிகள்

சீருடை

இணை சேவைகள் 

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள்

மருத்துவ வசதிகள். என்பன பட்டப் படிப்பின் போது மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகம் சங்கம் என்பவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மாணவர் cadet பட்டப்படிப்பு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..

தேவையான தகைமைகள்

இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்

விண்ணப்ப முடிவுத் திகதி அன்று 18 வயதுக்குக் குறையாமலும் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்ற தகமை பெற்றிருத்தல் வேண்டும்.

திருமணம் முடிக்காதவரா ஆக இருக்க வேண்டும்.

பின்வரும் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகக்குறைந்தது சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில்திறமை  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டப் படிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு..

DEGREES OFFERED AT KDU – RATMALANA

Faculty of Defence and Strategic Studies

.விண்ணப்பதாரி உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

Faculty of Medicine

2020 உயர் தரத்தை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். உயிரியல் பிரிவில் உயர் தரத்தில் இரண்டு திறமைச் சித்தி கள் மற்றும் ஒரு சாதாரண சித்தி அல்லது மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி.

Faculty of Engineering

2020 உயர் தரத்தை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். கணித பிரிவில் உயர் தரத்தில் இரண்டு திறமைச் சித்தி கள் மற்றும் ஒரு சாதாரண சித்தி அல்லது மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி.

Faculty of Law

.குறித்த பாட நெறிக்கு உயர்தரத்தில் நீங்கள் எந்தப் பாடப் பிரிவில் பயின்று இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும்

சாதாரண தரத்தில் ஆகக்குறைந்தது தமிழ் பாடத்தில் திறமைச் சித்தி அவசியம்.

உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இரண்டு திறமை சித்தி மற்றும் ஒரு சாதாரண சித்தி அல்லது மூன்று திறமை சித்திகள் பெற்றிருக்க வேண்டும்.

கீழ்வரும் பாடப் பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடங்களை உயர்தரத்தில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பாடங்களையும் எஞ்சிய பாடமாக கீழே உள்ள பாடங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியும்.

5.

Faculty of Management, Social Sciences and Humanities

மேற்குறிப்பிட்ட மூன்று பாட நெறிகளையும் பயில்வதற்கு குறிப்பிட்ட வருடத்தில் உயர் தரத்தை பயின்றிருக்க வேண்டும்.

மேலே அட்டவணையில் காட்டப்பட்டுள்ள உயர்தர பாடப் பிரிவில் 3 சாதாரண சித்திகளை பெற்று இருத்தல்  போதுமானது..

Faculty of Computing

மேலே காட்டப்பட்டுள்ள 3 கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டாயமாக உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்றிருக்க வேண்டும்.

உயர்தரத்தில் 3 சாதாரண சித்திகளை பெற்று இருத்தல் போதுமானது..

சூரியவேவ இல் அமைந்துள்ள southern campus இல் காணப்படும் கற்கை நெறிகளுக்கான விபரங்களை கொடுக்கப்பட்டுள்ள pdf ஐ முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

குறித்த கற்கை நெறிகளுக்கு தபால் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும். (விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது)

online application link

விண்ணப்பதாரிகள் தான் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தலா 1,500 வீதம் மீள் செலுத்தப்படாத கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

நீங்கள் மூன்று பட்டப்படிப்பு பாட நெறிகளுக்கு விண்ணப்பித்தால் ரூபாய் 4500 செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அனுப்பப்படும் விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.நேர்முகப்பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம் முற்றுமுழுதாக பல்கலைக்கழகத்தால் மாத்திரமே எடுக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி – 2021 மே 28.

TAMIL ADVERTISMENT (PDF) – DOWNLOAD

ENGLISH ADVERTISMENT(PDF) – DOWNLOAD

FULL DETAILS – DOWNLOAD

ONLINE APPLICATION — APPLY

WEBSITE LINK – VIEW