UGC HANDBOOK 2020/2021 RELEASED BY UNIVERSITY GRANTS COMMISION

University handbook 2020/ 2021 released by university grants commission for university admission academic year 2020/2021

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கோரும் பொருட்டு 2020 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் ஆகக்குறைந்த தேவைகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக ஏற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமை

அங்கீகரிக்கப்பட்ட சகல மூன்று படங்களிலும் ஒரே தடவையில் குறைந்தது சாதாரண சித்திகளை மூன்று அமர்வுகளில் பெற்றிருக்க வேண்டும்.

பொது சாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30 வீதம் புள்ளிகள் பெற்று இருத்தல்.

2020 2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வழிகாட்டி நூலைபெற்றுக் கொள்ளும் முறை.

21.05.2021 முதல் பல்கலைக்கழக வழிகாட்டி நூலை கீழ்வரும் முறைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் பிரதேசத்தில் காணப்படும் பிரபலமான புத்தக சாலைகளில் ரூபாய் 500 செலுத்தி குறித்த பல்கலைக்கழக கைநூலை  பெற்றுக் கொள்ள முடியும்.

அல்லது

ரூபாய் 500 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்கில் வைப்பில் இட்டு உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அல்லது

ரூபாய் 500 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்கில் வைப்பில் இட்டு குறித்த பற்றுச் சீட்டை எழுத்துமூல கடிதத்துடன் இனைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு அனுப்புவதன் மூலம் தபால் மூலம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது

கீழ்வரும் பல்கலைக்கழகங்களின் நலன்புரி பிரிவுகளிலிருந்து கை நூலை பெறலாம்..

உங்கள் மாவட்டத்தில் கை நூலை பெறக்கூடிய புத்தக சாலைகளில் விபரம்.

குறிப்பிடப்படாத மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பர அறிவித்தலை வாசிப்பதன் மூலம் உங்கள் மாவட்டத்திற்குரிய புத்தக சாலை களை தெரிந்துகொள்ளலாம்..

குறிப்பு – அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பர அறிவித்தலை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

UGC HAND BOOK PDFDOWNLOAD

ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 11 ஆம் திகதி ஜூன் மாதம் 2021 ஆகும்.

முழுமையான விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவித்தலை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..

விளம்பர அறிவித்தல்|paper advertisement

TAMIL – DOWNLOAD

ENGLISH – DOWNLOAD

பல்கலைக்கழக விண்ணப்பங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதல், பல்கலைக்கழக கற்கை நெறிகள் தொடர்பான முழுமையான விபரங்கள்,உளச்சார்பு பரீட்சை எதிர் கொள்பவர்களுக்கு ஆன வினாத்தாள்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பவற்றை எமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் இலவசமாக பகிர்ந்து கொள்வோம்..