இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு 16 புதிய கற்கை நெறிகள்

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிதாக 16 கற்கை நெறிகள் இந்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..

குறித்த கற்கை நெறிகளில் விபரம் மற்றும் அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான அடிப்படை தகைமைகள் என்பவற்றை பல்கலைக்கழக கைநூல் வழிகாட்டியை அடிப்படையாகக் கொண்டு தொகுத்து வழங்கியுள்ளோம்..

1.ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆல் வழங்கப்படும் கலை தகவல் தொழில்நுட்பம்

உத்தேச அனுமதி 50

இதற்கு தகுதி பெறுவதற்கு உயர்தர கலைப்பிரிவில் ஏதாவது மூன்று பாடங்களில் சாதாரண சித்தி பெற்று இருக்க வேண்டும்..

சாதாரண தரத்தில் கணித பாடத்தில் குறைந்தது C சித்தியை பெற்றிருக்க வேண்டும்..

.. காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்..

2.கணக்கியல் தகவல் முறைமைகள் (Accounting Information Systems)

உத்தேச அனுமதி 50

கணக்கியல் தகவல் முறைமைகள் வணிக முகாமைத்துவ கௌரவ மானி பட்டம் ஆகும்..களனிப் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் நான்கு வருட கற்கை நெறியாகும்.

உயர்தரப் பரீட்சையில் கணக்கீடு பாடத்தில் சித்தி பெற்றிருப்பதுடன் கீழ்வரும் பாடச் சேர்க்கைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது சாதாரண சித்தி

பொருளியல் மற்றும் வணிகக்கல்வி

அல்லது

வியாபார புள்ளிவிபரவியல் அல்லது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்

3.தொழில் வழி சிகிச்சை (Occupational Therapy)

தொழில் வழி சிகிச்சை விஞ்ஞானமானி பட்டம்..

களனி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றது.. மொத்த காலம் நான்கு வருடங்கள் ஆகும்..

தகுதி பெறுவதற்கு உயர்தர பரீட்சையில் இரசாயனவியல் பௌதீகவியல் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது சாதாரண சித்தியை  பெற்றிருக்க வேண்டும்..

4. பார்வை அளவை(Optometry)

உத்தேச அனுமதி 60

பார்வை அளவை விஞ்ஞான கௌரவ மானி பட்டம் 

மொத்த காலம் நான்கு வருடங்கள் ஆகும்.ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றது..

உயர்தர பரீட்சையில் இரசாயனவியல் பௌதீகவியல் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது சாதாரண சித்தியை பெற்றிருக்க வேண்டும்.

5.பிரயோக இரசாயனவியல்(Applied Chemistry)

உத்தேச அனுமதி 60

களனி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிரயோக இரசாயனவியல் விஞ்ஞான பட்டம் ஆகும்..

மொத்த காலம் நான்கு வருடங்கள்..

தகுதி பெறுவதற்கு இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் ஆகிய பாடங்களில் உயர்தரத்தில் சாதாரண சித்தியை பெற்றிருப்பதுடன் மூன்றாவது பாடமாக கீழ்வரும் நிரலில் உள்ள ஏதேனும் ஒரு ஆட்டத்தில் அவர்பெற்றிருக்க வேண்டும்.

  • உயிரியல்
  • இணைந்த கணிதம்
  • கணிதம்
  • உயர் கணிதம்
  • விவசாய விஞ்ஞானம்

6.சுதேச மருத்துவ வளங்கள்(Indigenous Medicinal Resources)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சுதேச மருத்துவ வளங்களில்  கௌரவ இளமானி பட்டம்..

மொத்த காலம் நான்கு வருடங்கள். கபோத உயர்தர பரீட்சையில் பின்வரும் நிரலில் உள்ள ஏதேனும் மூன்று பாடங்களில் ஆகக்குறைந்தது சாதாரண சித்தியை பெற்றிருக்க வேண்டும்.

  • இரசாயனவியல்
  • பௌதிகவியல்
  • உயிரியல்
  • விவசாய விஞ்ஞானம்

7.நீர் உயிரின வளங்கள்(Aquatic Bioresources)

உத்தேச அனுமதி 50

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆல் வழங்கப்படும் நீர் உயிரின வழங்கல் கௌரவ விஞ்ஞானமானி பட்டம் ஆகும். மொத்தம் நான்கு வருடங்களைக் கொண்டது.

உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களில் ஆகக்குறைந்தது சாதாரண சித்தியை பெற்றிருக்க வேண்டும்.

8.நகர்ப்புற உயிர் வளங்கள்(Urban Bioresources)

உத்தேச அனுமதி 50

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆல் வழங்கப்படும் நகர்ப்புற உயிர் வளங்கள் கௌரவ விஞ்ஞானமானி பட்டம் ஆகும் மொத்த காலம் நான்கு வருடங்களைக் கொண்டது.

உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களில் ஆகக்குறைந்தது சாதாரண சித்தியை பெற்றிருக்க வேண்டும்.

9.செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence)

உத்தேச அனுமதி 50

செயற்கை நுண்ணறிவு கௌரவ விஞ்ஞானமானி பட்டம் ஆகும். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்களைக் கொண்டது.

உயர்தரப் பரீட்சையில் இணைந்த கணிதம் அல்லது பௌதிகவியல் அல்லது உயர் கணிதம் ஒன்றில் குறைந்தது c சித்தி

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் ஏதேனும் இரண்டில் தோற்றி சாதாரண சித்தியை பெற்றிருக்க வேண்டும்

  • இணைந்த கணிதம்
  • உயர் கணிதம்
  • கணிதம்
  • பௌதிகவியல்
  • இரசாயனவியல்
  • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்.

10.இலத்திரனியல் மற்றும் கணனி விஞ்ஞானம்(Electronics and Computer Science)

உத்தேச அனுமதி 80

இலத்திரனியல் மற்றும் கணனி விஞ்ஞானம்கௌரவ விஞ்ஞானமானி பட்டம் ஆகும். மொத்தம் நான்கு வருடங்களைக் கொண்டது.களனி பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகின்றது.

உயர்தரத்தில் இணைந்த கணிதம் அல்லது பௌதிகவியல் அல்லது உயர் கணிதம் ஆகியவற்றில் ஒன்றில் குறைந்தது திறமைச் சித்தி..

பௌதிகவியல் மற்றும் இணைந்த கணிதம் அல்லது உயர் கணிதம் மற்றும் மூன்றாவது பாடம் கீழே நிழலில் தெரிவு செய்யப்பட்டு ஆகக் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி

  • இரசாயனவியல்
  • இணைந்த கணிதம்
  • உயர் கணிதம்
  • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்

11.சுகாதார தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம்(Health Information and Communication Technology)

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சுகாதார தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கௌரவ சுகாதார விஞ்ஞான மானி பட்டம் ஆகும்.

மொத்தம் காலம் நான்கு வருடங்கள்.உயர்தரப் பரீட்சையில் குறைந்த பட்சம் சாதாரண சித்திகளை பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்..

12.சுகாதார சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்(Health Tourism and Hospitality Management)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சுகாதார சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கௌரவ விஞ்ஞானமானி பட்டம் ஆகும்.

மொத்த காலம் நான்கு வருடங்கள்.உயர்தரப் பரீட்சையில் குறைந்த பட்சம் சாதாரண சித்திகளை வர்த்தகப் பிரிவில் அல்லது உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அல்லது பௌதிக விஞ்ஞான பிரிவில் அல்லது பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருத்தல் வேண்டும்.

13.உயிரி மருத்துவ தொழில்நுட்பம்.(Biomedical Technology)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் உயிரி மருத்துவ தொழில் நுட்பத்தில் கௌரவ சுகாதார விஞ்ஞானமானி பட்டம் ஆகும்..

மொத்த காலம் நான்கு வருடங்கள் ஆகும்.உயர்தரப் பரீட்சையில் குறைந்த பட்சம் சாதாரண சித்திகளை பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.

14.சுதேச மருந்தக வியல் தொழில்நுட்பம்(Indigenous Pharmaceutical Technology)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சுதேச மருந்தக வியல் தொழில்நுட்பத்தில் கௌரவ சுகாதார விஞ்ஞானமானி

மொத்த காலம் நான்கு வருடங்கள் ஆகும்.

உயர்தரப் பரீட்சையில் குறைந்த பட்சம் சாதாரண சித்திகளை பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்

அல்லது

உயர்தரப் பரீட்சையில் குறைந்தது சாதாரண தரத்தை பின்வரும் பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்

  • இரசாயனவியல்
  • பௌதிகவியல்
  • உயிரியல்
  • விவசாய விஞ்ஞானம்

15.யோகா மற்றும் மன நிகழ்வுகளின் ஆய்வு(Yoga and Parapsychology)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் யோகா மற்றும் மன நிகழ்வுகளின் ஆய்வில் கௌரவ விஞ்ஞானமானி பட்டமாகும். மொத்தம் நான்கு வருடங்களைக் கொண்டது.

உயர்தர பரீட்சையில் குறைந்த பட்சம் சாதாரண சித்திகளை ஏதேனும் 3 பாடத்தில் பெற்று இருத்தல்

16.சுதேச அறிவியல் மீதான சமூக கல்வி.(Social Studies in Indigenous Knowledge)

உத்தேச அனுமதி 50

இலங்கை கம்பகா விக்ரமரச்சி சுதேச மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சுதேச அறிவியல் மீதான சமூக கல்வியில் கௌரவ விஞ்ஞானமானி.

மொத்தம் நான்கு வருடங்கள் ஆகும். உயர்தரப் பரீட்சையில் சாதாரண சித்திகளை ஏதேனும் மூன்று பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.