Peoples Bank-Customer Service Assistant vacancies 2025

Peoples Bank-ustomer Service Assistant vacancies 2025

ONLINE APPLY APPLY
எப்படி விண்ணப்பிப்பது வீடியோ விளக்கம் தமிழில்WATCH VIDEO

வாடிக்கையாளர் சேவை உதவியாளர்

மக்கள் வங்கி

கல்வித் தகைமைகள்

  • G.C.E (O/L) இல் 6 பாடங்களில் சித்தி (சிங்களம்/தமிழ், கணிதம், ஆங்கிலம் உட்பட 5 திறமைச் சித்திகளுடன்).
  • அல்லது Edexcel/Cambridge O/L இல் 6 பாடங்களில் ‘C’ தர சித்தி (ஆங்கிலம், கணிதம் உட்பட).
  • மற்றும் G.C.E (A/L) இல் 3 பாடங்களில் சாதாரண சித்தி.
  • அல்லது Edexcel/Cambridge A/L இல் 3 பாடங்களில் ‘E’ தர சித்தி.

வயது வரம்பு

  • விண்ணப்ப முடிவுத் திகதியில் 18 – 23 வயதுக்கு இடையில் இருக்க வேண்டும்(அதன்படி, வயது தொடர்பான தகைமைகளை பூர்த்தி செய்ய, விண்ணப்பதாரரின் பிறந்த திகதி 2007.07.27 அன்று அல்லது அதற்கு முன்னதாகவும் மற்றும் 2002.07.27 அன்று அல்லது அதற்குப் பின்னதாகவும் அமைந்திருக்க வேண்டும்).

தேவையான திறன்கள்

  • கணினி அறிவு.
  • சிறந்த தனிநபர் தொடர்புத் திறன்.
  • அழுத்தங்களுக்கு மத்தியில் பணிபுரியும் திறன்.

தெரிவு முறை

  • 02 வருட ஒப்பந்த அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படும்.பயிற்சி காலத்தின் போது மாதாந்த SALARY வழங்கப்படும்.
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணையவழிப் பரீட்சை மூலம் முதல் கட்டத் தெரிவு.இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சான்றிதழ் கற்கைநெறிக்கான இணையவழிப் பரீட்சையின் (Onsite, Supervised, Online Examination) பின்னர், குறும்பட்டியலிடப்படும் (shortlisted) பரீட்சார்த்திகள், வங்கியினால் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சை/பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
  • வங்கியின் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.

குறிப்பு: பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

பரீட்சை விபரங்கள்

விபரம் விளக்கம்
வினாக்கள் 50 பல்தேர்வு வினாக்கள்
நேரம் 1 மணித்தியாலம்
புள்ளிகள் 100
பாடத்திட்டம் பொது அறிவு, நிதி, தகவல் தொழில்நுட்பம், நுண்ணறிவு போன்றவை.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
இப்போதே விண்ணப்பிக்கவும்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.07.27

Peoples Bank-Customer Service Assistantவழிகாட்டல் குழுவில் இணைய-JOIN GROUP(CLICK HERE)