மத்திய மாகாண அரசாங்க சபையின் உள்ளுராட்சி நிறுவனங்களில் வருமான பரிசோதகர் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
.
தேவையான தகைமைகள்
31 ஆம் திகதி ஜூலை மாதம் 2021 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு அதிகம் ஆகாமல் இருக்க வேண்டும்.ஏற்கனவே அரச சேவையில் இருக்கின்ற நிரந்தர பதவியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு பொருந்தாது.
விண்ணப்பதாரிகள் மத்திய மாகாணத்தில் நிரந்தர வதிவிட வாசிகளாக இருக்கவேண்டும்.. விண்ணப்ப முடிவுத் திகதி அன்று குறைந்தது மூன்று ஆண்டுகளாவது நிரந்தர வதிவிடத்தை கொண்டிருக்க வேண்டும்.
கல்வித் தகைமைகள்
சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி உடன் சாதாரண தர பரீட்சையில் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி
உயர் தரத்தில் குறைந்த பட்சம் ஒரு பாடத்திலாவது சித்தி அடைந்து இருத்தல்.
A4 அளவில் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை முழுமையாக நிரப்பி,பரீட்சை கட்டணமாக செலுத்தப்பட்ட 600 ரூபாயில் பற்றுச் சீட்டை இணைத்து 16 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2021 க்கு முன்னர் அனுப்பி வையுங்கள்..