Customer service assistant vacancies- peoples bank 2021

CUSTOMER-SERVICE-ASSISTNT-VACANCIES-AT-PEOPLE-BANK-2021

CUSTOMER SERVICE ASSISTNT VACANCIES AT PEOPLE BANK 2021

இலங்கையின் முதன்மை வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்டுள்ளன..

CLOSING DATE – 21.06.2021

தேவையான தகைமைகள் 

1.விண்ணப்பதாரர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்

2.குறைந்தபட்சம் சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி..(தமிழ் கணிதம் ஆங்கிலம் உட்பட 5 பாடங்களில் திறமைச் சித்தி வைத்திருக்க வேண்டும்)

3.உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சாதாரண சித்தி இருத்தல் போதுமானது..

4.விண்ணப்பதாரியின் வயது 18க்கு குறையாமலும் 23க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

குறித்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் நான்கு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அனைத்து வங்கி நடவடிக்கைகள் உள்ளடங்கும் வகையில் முறையான பயிற்சி காலத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் அதன்போது மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

குறித்த பதவிக்கு எப்படி ஆட்சேர்ப்பு செய்யப்படும்?.

சேவைக்கு எழுத்து மூலப் பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை என்பவற்றின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவீர்கள்..

எழுத்து மூலப் பரீட்சை மூன்று பாடங்களை உள்ளடக்கியுள்ளது..

பரீட்சை தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும்.. நீங்கள் உங்களுக்கு விரும்பிய மொழியில் தோற்ற முடியும்..

நீங்கள் அனுப்பிய விண்ணப்ப படிவத்தில் அனுப்பப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக உங்களுக்கு பொருத்தமான தகமைகள் உள்ளதை தெளிவுபடுத்துவதற்காக நேர்முகப்பரீட்சை  அழைக்கப் படுவீர்கள்.. நேர்முகப் பரீட்சையில் சித்தி அடையும் பட்சத்தில் நேரடியாக குறித்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள்..

எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.. அதாவது இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக நிரப்பி அதனை அனுப்ப வேண்டும்.. அனுப்பிய விண்ணப்ப படிவத்தை print எடுத்து கீழ் குறிப்பிடும்  முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும்..

முகவரி- Commissioner general of examinations,institutional examination organization branch, department of examination, p.o.box 1503, Colombo.

குறிப்பு- விண்ணப்ப படிவம் ஆங்கில மொழியில் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் அனுப்பிய விண்ணப்ப படிவமும்,பதிவுத் தபாலில் அனுப்பிய விண்ணப்ப படிவமும் ஒரே மாதிரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே நீங்கள் எழுத்துப் பரீட்சைக்கு தெரிவு செய்யப் படுவீர்கள்..

நீங்கள் அனுப்பிய ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்கள் கை தொலை பேசிக்கு SMS மூலமாக அல்லது உங்கள் ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும்..

பரீட்சைக்கான கட்டணம் 600 ரூபாய் ஆகும்..கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலமாக மாத்திரமே செலுத்த முடியும்..

1. எந்த ஒரு வங்கி கடன் அட்டை மூலம்(credit card payment)

2. எந்த ஒரு வங்கி டெபிட் அட்டை மூலம்..(debit card payment)

3. இலங்கை வங்கி ஆன்லைன் payment மூலம்(Bank of Ceylon online payment system)

4. இலங்கை வங்கிக் கிளை மூலம்(bank of loan branch)

5. எந்தவொரு தபால் திணைக்களத்தின் தபால் அலுவலகத்தின் மூலம்..(post office)

நீங்கள் கட்டணம் செலுத்தி உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும்..

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான.லிங்க் – APPLY

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான instruction pdf – VIEW

Gazette pdf – VIEW

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள instructions pdf இதில் பல்வேறு எழுத்துப்பிழைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன.. சில இடங்களில் தெளிவின்மை காணப்படுவதால் அதில் உள்ள பிழைகளை திருத்தி கீழே ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கொடுத்துள்ளோம்.. பூரணமாக வாசித்து சரியான முறையைப் பின்பற்றி நிரப்பவும்..

முக்கிய குறிப்பு- * ஸ்மார்ட்போன் பயன்படுத்தி விண்ணப்பிக்க முயற்சி செய்யாதீர்கள்.. முடிந்தவரை கணினியை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.*

முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து சென்றவுடன் உங்களுக்கு login செய்வதற்கான திரை தோன்றும்..

இதில் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம், நீங்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைபேசி இலக்கம், உங்கள் ஈமெயில் முகவரி என்பவற்றை கொடுங்கள்.. பின்னர் கீழே காட்டப்பட்ட வாறு I agree with the terms and conditions மற்றும் ✓ recaptcha என்பதை கிளிக் செய்து next கொடுங்கள்..

கொடுத்தவுடன் உங்கள் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் மூலம் otp number கிடைக்கும்..otp இலக்கத்தை கொடுத்து submit செய்யுங்கள்..

அடுத்து தோன்றும் திரையில் உங்கள் சொந்த தகவல்கள் கேட்கப்படும். அதில் உங்கள் பெயரை ஆங்கில capital எழுத்துக்களில் மாத்திரம் எழுதுங்கள்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அதேபோல நிரப்பிக்கொள்ளுங்கள்..

அடுத்து உங்கள் முகவரியை நிரப்பும் பொழுது முதல் வரியில் உங்கள் postal town இல்லாமல் வீட்டு இலக்கத்தையும், நீங்கள் இருக்கும் பிரதேசத்தையும் குறிப்பிடுங்கள்..

அடுத்த வரியில் நீங்கள் வசிக்கும் postal town பகுதியை குறிப்பிடுங்கள்..

அதன் பின்னர் உங்கள் மொழி மூலம், பாலினம், தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறிப்பிடுங்கள்.

இறுதியாக அனைத்து தகவல்களும் சரி என்பதை உறுதிப்படுத்தி விட்டு submit என்பதை கொடுக்கவும்..

உங்கள் தகவல்கள் எல்லாம் பூரணப்படுத்த பட்ட பின்னர் ஒரு தடவை சரி பார்த்துவிட்டு தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்பதற்கு ✓ கொடுத்துவிட்டு பின்னர்  proceed to payment என்பதை கொடுங்கள்..

குறிப்பு – கொடுக்கப்பட்ட தகவல்கள் ஏதும் பிழை இருந்தால் மீண்டும் விண்ணப்பத்தை க்குள் சென்று அதனை edit செய்துவிட்டு மீண்டும் submit application என்பதை கொடுங்கள்

பின்னர் பரீட்சைக் கட்டணம் செலுத்துவதற்கான திரை தோன்றும். அதில் நீங்கள் பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து கொள்ளுங்கள்..

அதில் டெபிட் அல்லது கிரெடிட் அட்டையை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்போது 1.7 வீதம் மேலதிக சேவை கட்டணமாக அறவிடப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதமாக  அட்டையின் விபரத்தை பூர்த்தி செய்து payment செய்யவும்..

PAY WITH POST

ஒருவேளை நீங்கள் தபால் மூலம் பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்தால் உங்களுக்கு ஒரு தொடர் இலக்கம் கொடுக்கப்படும் அதனை எந்த ஒரு தபால் திணைக்களத்திடம் பயன்படுத்தி பணத்தை செலுத்தி விட்டு விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பித்தல் வேண்டும்.

அல்லது நீங்கள் boc கிளை மூலமாக பணம் செலுத்தினால் அதேபோல ஒரு தொடர் இலக்கம் கொடுக்கப்படும். அதனை பயன்படுத்தி பணத்தை செலுத்தி விட்டு தொடர்ச்சியாக ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

Payment செலுத்திய பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்.. அதில் continue after payment என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அதில் உங்கள் reference number ஐ கொடுக்கவும்.. கொடுத்த பின்னர் proceed என்பதை தெரிவு செய்யுங்கள்..

உங்கள் payment உறுதி செய்யப்பட்ட பின்னர் அதற்கான பற்றுச் சீட்டு காண்பிக்கப்படும்… அதனை நீங்கள் பிரின்ட் செய்து கொள்ளவும் முடியும்.. இதில் மேலதிகமாக உங்கள் தொலை பேசிக்கு அல்லது இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும்..

இறுதியாக விண்ணப்ப படிவத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் நான் உறுதிப்படுத்துகிறேன் என்பதற்கு ✓ கொடுத்துவிட்டு complete and submit என்பதை கொடுக்கவும்..

அதன் பின்னர் தோன்றும் திரையில் காணப்படும் உங்கள் referance number குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உங்கள் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்..(உங்கள் ஈமெயில் முகவரிக்கு டவுன்லோட் செய்வதற்கான லிங்க்  அனுப்பப்படும்)

பிரதி எடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்வரும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்…

முகவரி- Commissioner general of examinations,institutional examination organization branch, department of examination, p.o.box 1503, Colombo.