பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்..

important notice about Online application for university entrance 2021

2020/ 2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு ஆன்லைன் மூலமான விண்ணப்பங்கள் அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டு இருந்தது..

இம்முறை விண்ணப்பிக்கும் போது பாடசாலை விலகல் சான்றிதழ் அல்லது சாதாரண தர பரீட்சை பெறுபேறு பிரதியோ பல்கலைக்கழக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டில் தற்போது நிலவும் கோவிட்  நிலைமையால் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மற்றும் பாடசாலைகள் தற்சமயத்தில் மூடப்பட்டுள்ளதால் குறித்த தீர்மானத்தை எடுத்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம அலுவலர் சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது எனினும் அவ்வாறான சான்றிதழ் இன்றி விண்ணப்பத்தை மட்டும் அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிலைமை சீரடைந்து பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட பின்னர் இவ்வாறான சான்றிதழ்களை அனுப்புவது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அதன் போது மாத்திரம் சான்றிதழ்களை அனுப்பினால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் யாரும் வேறு இடங்களுக்கு செல்லாமல் தமது வீடுகளிலிருந்து மாத்திரம் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்பும் வகையில் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.