INSTRUCTIONS FOR GS ONLINE APPLICATION

INSTRUCTIONS FOR GS ONLINE APPLICATION

இன்று முதல் கிராம அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான லிங்க் மூலம் உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும்..

எனினும் பல விண்ணப்பதாரிகளுக்கு இன்னும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை நிரப்பி எப்படி submit செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் நிலவுகின்றது..இதனால் பலர் இன்னும் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்..

இந்தப் பதிவில் நான் இன்னும் ஒருவருக்காக ஆன்லைனில் விண்ணப்பித்த முறையை புகைப்படங்களுடன் படிமுறைகள் ஆக கொடுத்துள்ளேன்.. நீங்கள் இதனை பின்பற்றுவதன் மூலம் இலகுவாக உங்கள் விண்ணப்ப படிவத்தையும் நிரப்பி பூர்த்தி செய்ய முடியும்..

படிமுறை 1

முதலில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்திற்கு செல்லுங்கள்..குறித்த இணைய தளத்திற்கு கீழே நான் கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தி செல்ல முடியும்..

இணைய தளத்துக்குள் சென்றவுடன் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட புகைப் படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் தோன்றும்.. இந்தப் பக்கத்தில் இரண்டாவதாக competitive examination for recruitment to grade 3 of grama niladhari என குறிப்பிடப்பட்டிருக்கும்.. அதில் மூன்று பொத்தான்கள் காணப்படும்..

1.gazette – இதை கிளிக் செய்வதன் மூலம் பரிட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகைமைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய வர்த்தமானி அறிவித்தலை வாசிக்க முடியும்..

2. instructions– எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள் மூன்று மொழிகளிலும் காணப்படும்..

மூன்றாவதாக apply என்ற பொத்தான் காணப்படும்.. இதனை கிளிக் செய்வதன் மூலம் நாம் விண்ணப்பத்துக்கு உள்நுழைய முடியும்..

படிமுறை 2 

Apply என்பதை கொடுத்தவுடன் login பக்கத்திற்குள் உங்களால் நுழைய முடியும்.. இதில் மூன்று விடயங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. உங்கள் அடையாள அட்டை இலக்கம், உங்கள் தொலைபேசி இலக்கம், உங்கள் மின்னஞ்சல் முகவரி.. 

இதில் நீங்கள் தற்பொழுது பாவித்து கொண்டிருக்கும் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பது முக்கியமானது..ஏனெனில் இந்தப் பக்கத்திற்கு மீண்டும் நீங்கள் நுழைவதற்கு இதே தொலைபேசி இலக்கமும் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படும்..

மூன்று விபரங்களையும் கொடுத்த பின்னர் i agree with terms and conditions என்பதற்கு சரி கொடுங்கள்..பின்னர் நீங்கள் ஒரு மனிதர் தானா என்பதை உறுதிப்படுத்த iam not a robot என்பதற்கு சரி கொடுத்து okk பண்ணுங்கள்..

படி முறை 3

உடனடியாக உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு otp இலக்கம் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.. திரையில் otp இலக்கம் கேட்கப்பட்டுள்ள கூட்டினுள் குறித்த நான் இலக்கங்களைக் கொண்ட otp இலக்கத்தை கொடுக்கவும்

கொடுத்த பின்னர் அடுத்த பிரதான  பக்கத்தில் உள்நுழையவும்.

படிமுறை 4 

பிரதான பக்கத்துக்குள் நுழைந்ததும் விண்ணப்ப படிவத்தை உங்களால் அவதானிக்க முடியும்..

அதில் உங்கள் personal information பற்றிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும்..

முதலாவதாக உங்கள் பரீட்சை எழுதவுள்ள நகரம், உங்கள் பிரதேச செயலகப் பிரிவு, பரீட்சை எழுதவுள்ள மொழி என்பன கேட்கப்பட்டிருக்கும்..

மூன்றையும் அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக….

1.கூட்டில் name in full அதாவது உங்கள் முழுப்பெயர் ஆங்கிலத்தில் capital எழுத்துக்களில் மாத்திரம்..

உதாரணமாக உங்கள் முழுப்பெயர் குமரேசன் தர்ஷன் என எடுத்துக் கொண்டால் KUMARESAN THARSAN என  கூட்டினுள் டைப் செய்ய வேண்டும்..

2. கூட்டில் உங்கள் பெயரை initial எழுத்துக்களுடன் ஆங்கிலத்தில் capital வடிவத்தில் டைப் செய்ய வேண்டும்..

மேலே குறிப்பிட்டது போல உதாரணமாக THARSAN.K என டைப் செய்ய வேண்டும்..

3.  உங்கள் நிரந்தரமான சொந்த முகவரியை capital வடிவத்தில் குறிப்பிடவும்..

4.அடுத்ததாக நீங்கள் வசிக்கும் நகரம் பகுதியை கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் தெரிவு செய்து கொள்ளுங்கள்..

உதாரணமாக உங்கள் நகரம் jaffna town என்றால் Jaffna என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்..

5. அந்தக் கூட்டில் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்..

6.அதனைத் தொடர்ந்து நீங்கள் வசிக்கும் பிரதேசத்தில் பரம்பரையாக வசிக்கிறீர்களா அல்லது பதிவு மூலம் வசிக்கிறீர்களா என்பதை தெரிவு செய்யவும்.

7. அடுத்து உங்கள் வயதை கொடுக்கும் பொழுது வருடங்கள் மாதங்கள் நாட்கள் என்ற அடிப்படையில் கொடுக்க வேண்டும்..  2021.06.28 ஆம் திகதி உங்கள் வயது எத்தனை என்பதை வருடம் மாதம் நாட்கள் என்ற அடிப்படையில் கொடுக்க வேண்டும்..

குறிப்பு – 21 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்..

8. அடுத்து தற்சமயம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தொலைபேசி இலக்கத்தை கொடுக்க வேண்டும்.

தற்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய ஒரு கேள்வி உருவாகலாம்.. உங்களுடைய கல்வித் தகமை தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்ட கூட்டில் எழுத்துக்களையும் டைப் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?..

அதற்கான பதில் ஆன்லைன் விண்ணப்பத்தில் உங்கள் சுய விபரங்களை மாத்திரம் நிரப்பிய பின்னர் இதனை save செய்து submit application என்பதை கொடுக்க வேண்டும்.. பின்னர் உங்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்த முடியும்..(ஆன்லைன் மூலமாக செலுத்த முடியாதவர்கள் post office இல் செலுத்தமுடியும்)

ஆன்லைன் மூலமாக இரண்டு விதமாக செலுத்த முடியும்..

  1. விசா அல்லது மாஸ்டர் கார்ட் பயன்படுத்தி..
  2. Boc ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தி..

இரண்டில் ஏதாவது ஒரு முறை மூலம் நீங்கள் கட்டணத்தை செலுத்தும் போது உங்களுக்கான பற்றுச்சீட்டு திரையில் காண்பிக்கப்படும்.. இதனை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்..

பற்றுச்சீட்டு தோன்றியதன் பின்னர் அடுத்ததாக verification பக்கம் தோன்றும்..

அதில் உங்கள் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தை நிரப்ப வேண்டும்.. இறுதியாக கீழே காணப்படும் இரண்டு விதிமுறைகளுக்கும் சம்மதம் தெரிவிக்கும் வகையில் இரண்டு கூடுகளிலும் சரி இட வேண்டும்..

 பின்னர் complete and submit என்பதை கொடுக்கவும்.. உங்களுக்கான ஒரு referance code தோன்றும்.. அதனை எழுதி வைத்துக் கொள்ளவும்..

கீழே உள்ள பொத்தானில் dowloand my application என்பதை கொடுத்து உங்கள் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்..

 விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் செய்து  அந்த விண்ணப்ப படிவத்தில் எஞ்சிய கூட்டில் உள்ள விவரங்களை உங்கள் கையால் எழுதி நிரப்பி தேவையான மற்ற விபரங்களையும் இணைத்து உங்கள் கையொப்பத்தை யும் இட்டு தபால் மூலம் குறித்த விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்..

நீங்கள் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளவராக இருந்தால் கிராமசேவகர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. குறித்த குழுமத்தில் கிராம சேவகர் பரீட்சை வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், பயிற்சி வினாக்கள் மற்றும் நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவோம்..

NOTE– கிராம சேவகர் பரீட்சைக்கான வினாத்தாள்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் DOWNLOAD