இனிமேல் நம்மால் whatsapp பயன்படுத்த முடியாதா ?whatsapp updates officially its terms and conditions

ற்போது உலக அளவில் பலராலும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறி இருப்பது February 8ஆம் திகதிக்குப் பின்னர் வாட்ஸ்அப் நமது மொபைல் போன்களில் வேலை செய்யுமா என்பதுதான்…

உலகளவில் சுமார் 100 கோடி பாவனையாளர்கள் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் காரணமாகவே இந்த சந்தேகம் நம் எல்லார் மத்தியிலும் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களாக எல்லாருடைய வாட்ஸ்அப் திரையிலும் இப்படி ஒரு விடயம் வாட்ஸ் அப் நிறுவனத்தினால் காட்டப்படுகின்றது.

credit– EN24NEWS

இதில் வாட்ஸ் அப்பின் உடைய புதிய விதிமுறைகளுக்கு நீங்கள் accept செய்கிறீர்களா அல்லது not now கொடுக்கிறீர்களா என கேட்கப்படுகின்றது.

இதற்குக் காரணம் என்ன?

உங்களுக்கு புரியும் விதமாக இலகுவாக சொல்வதென்றால் நாம் வங்கியில் கடன் வாங்கும் பொழுது வங்கியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய ஒரு பேப்பரில் நம்மிடம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கையெழுத்து வாங்குவார்கள்.

நாம் அதை வாசித்து கூட பார்ப்பது கிடையாது. கடன் வாங்குவதற்காக அதில் உடனே நமது கையெழுத்தைப் போட்டு விடுவோம்.அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் நமது சாட்டிங் டேட்டாவை எடுத்து தங்களுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்துவதற்காக நம்மிடமிருந்து கையெழுத்து வாங்குவது போன்ற ஒரு செயற்பாட்டை செய்கின்றார்கள்.

அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அந்த விதிமுறைகளில் குறிப்பிடுவது என்னவென்றால் feb 8 திகதிக்குப் பின்னர் நாம் மற்றவர்களுடன் உரையாடுகின்ற நமது chatting messages, நாம் அனுப்புகின்ற புகைப்படங்கள்(images), நாம் பயன்படுத்தும் மொபைல் brand, நமது browser தகவல்கள் அனைத்தையும் தமது ஃபேஸ்புக் நிறுவனத்தின் வியாபாரத்துக்காக பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

நமது நண்பர்களுடன் நாம் உரையாடும் சாட்டிங் message ஐ பயன்படுத்தி எப்படி அவர்கள் ஃபேஸ்புக் வியாபாரத்துக்கு பயன்படுத்துவார்கள் என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரலாம். உதாரணமாக நீங்கள் ஒரு மொபைல் போன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்ளலாம்.முதலில் நீங்கள் செய்யும் விடயம் வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் அல்லது உறவினரிடம் தற்போது எந்த மொபைல் போன் அதிகமாக விற்பனையாகிறது அல்லது எந்த மொபைல் போன் சிறந்தது என்பது பற்றி கேட்பீர்கள்..

இந்த சாட்டிங் ஐ வாட்ஸ்அப் பயன்படுத்தி இதனை பேஸ்புக் நிறுவனத்திற்கு அப்படியே கொடுத்து விடுவார்கள். நீங்கள் சிறிது நேரத்துக்குப்பின் ஃபேஸ்புக் app நுழையும் பொழுது மொபைல் போன்(smart phone) சம்பந்தப்பட்ட விளம்பரங்களை முழுமையாக காட்டுவார்கள்.அதாவது உங்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு அது தொடர்பான விளம்பரங்களை காட்டும்பொழுது நிச்சயமாக நீங்கள் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு மொபைல் போனை வாங்கு வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இப்போது எல்லாருக்கும் உருவாகியிருக்கும் ஒரு பயம் என்னவென்றால் நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து தனிப்பட்ட விடயங்களையும் நாம் வாட்ஸ்அப் மூலமாக நமக்கு நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றோம். இந்த தகவல்களை வாட்ஸ்அப் நமக்கு எதிராக பயன்படுத்தி விடுவார்களா? என்ற ஒரு கேள்வி தான் நம் எல்லார் மனதிலும் உருவாகியிருக்கின்றது.

ஆனால் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் இந்த நிபந்தனைகள் வருவதற்கு முன்னர் இருந்தே பல வருடங்களாக வாட்ஸ்அப் நிறுவனத்தில் நமது சாட்டிங் தகவல்கள் எடுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் காட்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதற்காக நம்மிடம் எந்த விதமான அனுமதி வாங்கப்படவில்லை.

இது பிற்காலத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சில நேரங்களில் சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்பதால் தற்போது அதற்கான நிபந்தனைகள் உரிய அனுமதியை வாங்க முயற்சி செய்கிறார்கள்.சில நேரங்களில் இந்த நிபந்தனைகளில் பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்னர் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே நீங்கள் செய்யவேண்டியது accept என்பதை இப்போது கொடுக்க வேண்டாம். not now என்ற ஆப்ஷனை மாத்திரம் தற்பொழுது கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிப்ரவரி 7ஆம் திகதி வரை பொறுமையாக இருங்கள்.நீங்கள் தொழில் செய்வதற்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலோ அல்லது உங்களுக்கு வாட்ஸ்அப் கண்டிப்பாக தேவைப்படுகிறது என்ற ஒரு நிலைமை இருந்தாலோ இப்பொழுதே யோசிக்காமல் accept என்பதை கொடுத்து விடுங்கள். அப்படி இல்லாமல் உங்கள் தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனம் எடுப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் பிப்ரவரி 7ஆம் திகதிவரை இதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு app இற்கு மாற வேண்டிய நிலமை வரலாம்..வாட்ஸ்அப் க்கு பதிலாக தற்பொழுது பலர் பயன்படுத்திக் கொண்டு இருப்பது டெலிகிராம் (telegram app)ஆகும்..

நமது வேலைவாய்ப்பு தகவல்களுக்காக நாம் ஒரு டெலிகிராம் குரூப்பை உருவாக்கியுள்ளோம். எனவே முன்னெச்சரிக்கையாக நீங்களும் நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள் – join our telegram group

தற்பொழுது பலருக்கும் இந்த புதிய rules தொடர்பாக சரியான விளக்கம் இல்லாமல் accept என்பதை தெரியாமல் கொடுத்து விடுகிறார்கள் .எனவே இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.இதன் மூலம் அவர்களும் பயன்பெறலாம் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*