Schools next week : school’s closed Next week
அடுத்த வாரமும் பாடசாலைகள் மூடப்படும்: 18ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஐயசிங்க தெரிவித்துள்ளÇர். கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரியதொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாரம் பாடசாலைகளை மூடுவதற்கும் 18ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கும் பொது அறிவித்தல் ஒன்றை வெளியிட கல்வி அமைச்சு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 18 ஆம் திகதிக்குப் பின்னர், பாடசாலைகளை நடாத்துவதற்கான பிரசசினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடுவதற்கும் போதுமான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.