Application for Sri Lanka Law College (SLLC) – Entrance Examination 2026

Application for Sri Lanka Law College (SLLC) – Entrance Examination 2026

Sri Lanka Law College is inviting applications from eligible candidates to sit for the General Entrance Examination 2026

இலங்கை சட்டக் கல்லூரி பொதுப் பிரவேசப் பரீட்சை – 2027

2027 கல்வி ஆண்டுக்கான மாணவர் அனுமதி

விண்ணப்பம் மற்றும் விபரம் தமிழில் வெளியானதும் வழிகாட்டல்களை பெற்று கொள்ள நமது வழிகாட்டல் குழுவில் இணையவும்:
இப்போதே குழுவில் இணையுங்கள் 💬

2027 ஆம் கல்வியாண்டில் ஆரம்பமாகும் முழுநேரப் பாடநெறிக்காக மாணவர்களைத் தகுதிகாண் பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

📅 விண்ணப்பக் காலம்: 2026 மார்ச் 30 (மு.ப 9.00) முதல் 2026 ஏப்ரல் 30 (பி.ப 9.00) வரை.
💻 முறைமை: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக மாத்திரம்.

🎓 விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகைமைகள்

(அ) கல்வித் தகைமை (உயர்தரம்):
  • இலங்கை அல்லது பிரித்தானிய க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் குறைந்தது இரண்டு (02) “C” சித்திகளும் மற்றும் ஒரு (01) சாதாரண சித்தியும் (S/E) பெற்றிருத்தல் வேண்டும்.
(ஆ) கல்வித் தகைமை (சாதாரண தரம்):
  • இலங்கை க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஆங்கில மொழிக்கு ஒரு “C” சித்தியும், சிங்களம் அல்லது தமிழ் மொழிக்கு ஒரு “C” சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
(இ) வயதுத் தகைமை:
  • விண்ணப்பங்கள் முடிவடையும் திகதியன்று (2026.04.30) விண்ணப்பதாரருக்கு 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

📝 பரீட்சை விவரங்கள்

அனைத்து விண்ணப்பதாரர்களும் 2026 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிரவேசப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

  • பொது அறிவு (General Knowledge) – 01 மணித்தியாலம்
  • பொது நுண்ணறிவு (General Intelligence) – 01 மணித்தியாலம்
  • ஆங்கில மொழித் தேர்ச்சி (Proficiency in English) – 1 ½ மணித்தியாலங்கள்
  • சிங்களம் அல்லது தமிழ் மொழித் தேர்ச்சி – 1 ½ மணித்தியாலங்கள்

💰 கட்டண விவரங்கள்

பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,200/-
சட்டக் கல்லூரிக் கட்டணம்: ரூபா 12,000/-
பணம் செலுத்தும் முறை:
சட்டக் கல்லூரிக் கட்டணமான ரூபா 12,000/- ஐ ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) அளுத்கடை கிளையில் உள்ள “Incorporated Council of Legal Education” நிறுவனத்தின் 063020073300 என்ற கணக்கு இலக்கத்திற்குச் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர், அந்தப் பற்றுச்சீட்டை (Receipt) ஸ்கேன் செய்து entrance@sllc.ac.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மின்னஞ்சலில் பெயர், NIC இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடவும்.

🚀 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தில் “Our Services” -> “Online Applications” ஊடாக சமர்ப்பிக்கவும்.

குறிப்பு: அறிவித்தல்களுக்கிடையே ஏதேனும் முரண்பாடுகள் காணப்படின், சிங்கள மொழி மூல அறிவித்தலே இறுதியானதாகக் கருதப்படும்.

Exam Preparation 2027
⚖️

சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை வழிகாட்டல்

கடந்த கால வினாத்தாள்கள் (Past Papers), மாதிரி வினாக்கள் மற்றும் மேலதிக வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள எமது விசேட குழுவில் இணையுங்கள்.

APPLICATIONAPPLY HERE(PENDING)-STARTS FROM 30.03.2026