Police Job Vacancies 2026 (Gazette & Application) 2026

Police Job Vacancies 2026 (Gazette & Application) 2026

Police Job Vacancies 2026 (Gazette & Application) 2026

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) ஆட்சேர்ப்பு 2026

மொத்த வெற்றிடங்கள்: 7,500 வர்த்தமானி: 2442 (2026.03.28) திருமணமாகாதவர் மட்டும்

விண்ணப்பிக்க இறுதித் திகதி: 2026 june மாதம் 01 ஆம் திகதி

விண்ணப்பிக்கும் முறை: ஒன்லைன் (Online) மாத்திரம்

1. பதவிகள் மற்றும் தகுதிகள்
பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி / விசேட அதிரடிப்படை சாரதி (ஆண்கள்)
  • வயது: 18 – 28 வயது.
  • கல்வி: கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய் மொழி (சிங்களம்/தமிழ்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக, இரு தடவைகளுக்கு மேற்படாது குறைந்தது இரண்டு (02) திறமைச் சித்திகளுடன், பாடங்கள் ஆறு (06) இல் சித்தியடைந்திருக்க வேண்டும்..
  • உடல்: உயரம் 05′ 02″, மார்பு 30″ (மூச்சை விடும்போது).
  • சாரதி அனுமதி: செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்.
பொலிஸ் கான்ஸ்டபிள் / விசேட அதிரடிப்படை (ஆண்கள் & பெண்கள்)
  • வயது: 18 – 24 வயது.
  • கல்வி (முறை 1): கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், அறிவியல், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இற்குத் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  • அல்லது : கல்விப் பொது தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் கணிதம், அறிவியல், சிங்களம்/தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் ஐந்து (05) இற்குத் திறமைச் சித்தியுடன், பாடங்கள் ஆறு (06) இல் அதிகபட்சம் இரு தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும்..
  • உயரம்: ஆண்கள் 05′ 04″ | பெண்கள் 05′ 01″.
2. விண்ணப்பிக்கும் முன் தயார் செய்ய வேண்டியவை

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர் பின்வருவனவற்றைத் தயார் செய்யவும்:

  • உடல் அளவுகள்: உங்கள் உயரம் மற்றும் மார்பு அளவை (அடி, அங்குலம் மற்றும் சென்றிமீட்டர் அளவுகளில்) சரியாக அளந்து குறித்து வைத்துக் கொள்ளவும்.
  • குடும்ப விபரங்கள்: பெற்றோர் மற்றும் சகோதரர் / சகோதரிகளின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள் மற்றும் வசிக்கும் காவல் நிலையப் பிரிவு (Police Division) தொடர்பான விபரங்கள்.
  • தொடர்பு விபரங்கள்: மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ்அப் (WhatsApp) எண் மற்றும் Facebook பெயர் (அதன் URL/இணைப்புடன்).
3. பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள் (Online)

(குறிப்பு: ஆவணங்கள் PDF/JPG வடிவில் 01 MB-க்குள் இருக்க வேண்டும்)

  • வெள்ளை பின்னணி கொண்ட பாஸ்போர்ட் அளவு நிறப் புகைப்படம் (கட்டாயம்).
  • பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC).
  • கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்.
  • சாரதி அனுமதிப்பத்திரம் (சாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு).
  • தற்போது அரச பணியில் இருப்பின், நிறுவனத் தலைவரின் விடுவிப்புக் கடிதம்.
4. நேர்காணல் வழிமுறைகள்

ஆரம்ப நேர்காணலுக்கு வரும்போது, நீங்கள் ஒன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் ஒரு நிறப்பிரதியை (Color Printout) எடுத்து அதில் கையொப்பமிட்டு கொண்டு வர வேண்டும். அத்துடன் பதிவேற்றிய அனைத்து ஆவணங்களின் ஒரு பிரதியையும் (Photocopy) உடன் கொண்டு வரவும்.

வர்த்தமானி பதிவிறக்கம் (Gazette Downloads)
Official Gazette (Tamil) Police Constable
Official Gazette (Tamil) Police Constable (Driver)
Official Gazette (Tamil/English) Women Police Constable