Apply for Sustainable Development Officer (Grade III) vacancies at the Sustainable Development Council of Sri Lanka (SDCSL). 06 posts available for graduates. Apply by June 7, 2026.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
வலுவாதார அபிவிருத்தி சபை
வெற்றிடம்
2017இன் 19ஆம் இலக்க இலங்கை வலுவாதார அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட வலுவாதார அபிவிருத்திச் சபையின் பின்வரும் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வலுவாதார அபிவிருத்தி அதிகாரி – தரம் III (06 வெற்றிடங்கள்)
சேவை வகுப்பு: இணை அதிகாரி (MA – 03)
தேவையான தகுதிகள்:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் கணனி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், இயற்கை விஞ்ஞானம், சமூகவியல், பொருளியல் அல்லது மேலாண்மைப்(MANAGEMENT) பாடங்களில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
ஏனையவை:
- 22 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
- சிறந்த உடல் மற்றும் உள ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும்.
- ஆங்கில மொழி தொடர்பான தேர்ச்சி மேலதிக தகுதியாகக் கருதப்படும்.
சம்பளம்:
MA – 53,940 – 10X800 – 11X1190 – 10X1320 – 5X1350 – 94,980
வாழ்வாதாரச் செலவுப்படி வழங்கப்படும். அத்துடன் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு வழங்கப்படும்.
பதவிக்கு ஒப்படைக்கப்படும் பிரதான கடமைகள்:
- வலுவாதார அபிவிருத்திக்கான வளங்கள் மற்றும் நிதி வசதிகள் வழங்குதலை ஒருங்கிணைத்தல்.
- தொடர்பாடல் மற்றும் ஆலோசனை ஒருங்கிணைப்பு, தரவு கண்காணிப்பு மற்றும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
- தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமது கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் அனுபவங்கள் அடங்கிய சுயவிபரக்கோவையை (CV) இரண்டு சிபாரிசுதாரர்களின் விபரங்களுடன் 2026-06-07 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “வலுவாதார அபிவிருத்தி அதிகாரி 2026” எனக் குறிப்பிடப்பட வேண்டும்.
பணிப்பாளர் நாயகம்,
இல. 35, 02ஆம் மாடி, லேக் ஹவுஸ் கட்டிடம்,
டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10.
இணையதளம்: www.sdc.gov.lk | தொலைபேசி: 0112885241
“வலுவாதார அபிவிருத்திப் பயணத்தில் பெருமைமிகு உறுப்பினராகுங்கள்”