Department of Technical Education and Training (DTET) calls applications for 215 NVQ Level 3, 4, 5 & 6 courses across 39 technical colleges for 2027. Apply online!

Technical College Admission 2027 – DTET Sri Lanka | தொழினுட்பக் கல்லூரி மாணவர் அனுமதி 2027
இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழினுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தினால் (DTET) நாடளாவிய ரீதியிலுள்ள தனது 39 தொழினுட்ப மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளில் 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் அனுமதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 முக்கிய சிறப்பம்சங்கள் (Key Highlights)
- பாடநெறிகளின் எண்ணிக்கை: 215 NVQ பாடநெறிகள் (சான்றிதழ், தேசிய டிப்ளோமா & HND)
- கற்பிக்கப்படும் மட்டம்: NVQ Level 3, Level 4, Level 5 மற்றும் Level 6
- கல்விக் கட்டணம்: முழுநேரப் பாடநெறிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்!
- மாதாந்த கொடுப்பனவு: தகுதியுடையோருக்கு மாதாந்தம் ரூபா 7,500/- வரை வருகைப்படி
- பயிற்சி நிலையங்கள்: நாடு முழுவதும் உள்ள 39 அரச தொழினுட்பக் கல்லூரிகள்
- குறைந்தபட்ச வயது: 16 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
- விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 டிசம்பர் 04
வழங்கப்படும் முக்கிய கற்கைத் துறைகள்
இலங்கையின் அரச தொழினுட்பக் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக கேள்வி கொண்ட பின்வரும் துறைகளில் பாடநெறிகள் நடத்தப்படுகின்றன:
- கணினியியல் & தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் (ICT, Software, Cyber Security, Networking)
- கட்டட நிர்மாணத்துறை & வரைவாளர் (Civil, QS, Draughtsmanship, Plumbing)
- மோட்டார் வாகனப் பொறியியல் (Automobile, Hybrid, Motor Cycle, Auto Electrical)
- மின் மற்றும் இலத்திரனியல் தொழினுட்பம் (Electrical, Electronics, Solar PV)
- இயந்திரவியல் மற்றும் உலோகம் (Machining, CNC, Welding, Mechatronics)
- வணிகம், கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் (Accounting, HRM, Logistics)
- விருந்தோம்பல், சுற்றுலா & சமையற்கலை (Cookery, Bakery, F&B)
- சுகாதாரம் மற்றும் பராமரிப்பு (Nurse Assistant, Elderly / Child Caregiver)
- ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் கலை (Apparel Design, Tailoring)
- விவசாயம் மற்றும் உணவுத் தொழினுட்பம் (Smart Agriculture, Food Technology)
- மொழிகள் (Professional English, Korean Language, TESL)
அனைத்து 215 பாடநெறிகளின் விபரம் மற்றும் விண்ணப்ப முறை
ஒவ்வொரு பாடநெறிக்குமான கல்வித் தகைமைகள், பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள், பயிலும் மொழி மற்றும் விண்ணப்பிக்கும் முழு விபரங்களைப் பார்வையிட கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்:
👉 View All 215 Courses & Full Details (முழு விபரங்கள்)📢 தமிழ் மாதிரி விண்ணப்பப்படிவம் & உடனடி அறிவிப்புகள்:
தொழினுட்பக் கல்லூரிக்கான தமிழ் மொழி மூல மாதிரி விண்ணப்பப்படிவம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அது வெளியானவுடன் எமது WhatsApp குழுவில் உடனடியாக பகிரப்படும்!
📲 Join Our WhatsApp Group (ceylonvacancy.com/wg)