2024 PRESIDENT ELECTION-HOW TO VOTE??
ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 18 முதல் 24 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ELECTION DATE | 21.09.2024 |
இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21.09.2024 அன்று இடம்பெறவுள்ளதுஇலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பதிவு முறை குறித்த முக்கிய விவரங்கள் இதேபோல இருக்கும்:
வாக்களிக்கும் முறை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலானது மிகுந்த சவால் மிக்க தேர்தலாகவும், விருப்பு வாக்கின் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலாகவும் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைவரும் தங்களுக்கான விருப்பு வாக்கையும் பயன்படுத்தலாம்.
ஒருவர் 1, 2, 3 என மூன்று வாக்குகளை வெவ்வேறுபட்ட மூன்று பேருக்கு அளிக்க முடியும்.
வாக்களிப்பு முறை 01
ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் X என அடையாளம் இடலாம் அல்லது 1 என இலக்கம் இடலாம்.
X என அடையாளம் இட்டால் ஏனைய விருப்பு வாக்குகளை செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்தினால் அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.
வாக்களிப்பு முறை 02
ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும் இன்னுமொருவருக்கு 2 எனவும் இலக்கமிட்டு இரண்டு வாக்குகளை அளிக்க முடியும்.
வாக்களிப்பு முறை 03
ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும், இன்னுமொருவருக்கு 2 எனவும், இன்னும் ஒருவருக்கு 3 எனவும் இலக்கமிட்டு மூன்று வாக்குகளை அளிக்க முடியும்.
இவற்றைத் தவிர வேறு ஏதாவது வகையில் அளிக்கப்படுகின்ற வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக கருதப்படும்.
1. X என அடையாளம் இட்டு பின்னர் விருப்பு வாக்குகளுக்கு 2, 3 ஆகிய இலக்கங்களை பயன்படுத்துதல்
2. மூன்று வாக்குகளையும் X என அடையாளம் இடுதல்
3. மூன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை இடுதல்.
செப்டம்பர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் வாக்குகள் 2024 வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கோரியுள்ளது.உங்கள் வாக்களிப்பு பெயர் தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை தேர்தல் இணையதளம் மூலமாக நீங்கள் சரிபார்க்க முடியும்.
உங்களை பெயரை சரிபார்க்க லிங்கை கிளிக் செய்யவும் –CLICK HERE
credits to lanka tamil net