Conditions – Government officers getting leave according to 14-2022.

Conditions – Government officers getting leave accourding to 14-2022.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்லல் விடுமுறை பெறுவதற்கான நிபந்தனைகள்

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சேவை மூப்பினை பாதிக்காத்  வகையில் வெளிநாட்டு சம்பளம் இல்லாத  விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் விதிகள் அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பொருந்தும்.

இந்த சுற்றறிக்கையின் பிரகாரம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

இது ஒவ்வொரு அரச அதிகாரியின் சேவை மூப்பு மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

 தற்காலிகமாக சேவையை விட்டு வெளியேறும் போது, பணியிடத்தின் பணியை ஈடுசெய்ய அல்லது பதில் கடமையாற்ற உள் அடிப்படையில் பணியமர்த்தும் முறை இருந்தால் மட்டுமே உரிய விடுமுறை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். அதற்கு புதிய ஆட்சேர்ப்புக்கான வாய்ப்பு இல்லை என சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.