Student Nursing Training Application 2026 & Gazette

Student Nursing Training Application 2026 & Gazette

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு – 2026 ஆம் ஆண்டு

🔔 online விண்ணப்பபம் இன்னும் வெளியாகவில்லை வெளியானதும் நமது வாட்ஸாப்ப் சேனல் இல் பதிவிடப்படும்

உடன் இணையவும் (WhatsApp Channel)
📌 இணையவழி விண்ணப்ப அறிவுறுத்தல்கள்
01
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முன் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அறிவுறுத்தல்களை முழுமையாக வாசிக்கவும்.
02
விண்ணப்பங்களை www.health.gov.lk இணையத்தளம் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
03
தகைமை: 2021, 2022, 2023 அல்லது 2024 க.பொ.த (உ.தர) பரீட்சையில் உயிரியல் அல்லது பௌதிக விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
📅
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.30
05
ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
⚠️ முக்கியமான கொடுப்பனவு அறிவுறுத்தல்: ரூபா 1000 /= விண்ணப்பக் கட்டணத்தை இலங்கை வங்கியில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
Online Banking அல்லது CDM இயந்திரங்கள் மூலம் செலுத்த வேண்டாம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் பணம் செலுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
08
முறையான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். விண்ணப்பப் பிரதியை உங்கள் மின்னஞ்சலுக்கு (Inbox/Spam) பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவும்.
🚫 விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்:
  • அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்விச் சலுகையின் கீழ் பயிலும் மாணவர்கள்.
  • தேசிய கல்வியியல் பீடம் அல்லது பிற அரச நிறுவனங்களில் முழுநேர கற்கைக்காகப் பதிவு செய்தவர்கள்.
11
கட்டாயமாக உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் தந்தை/தாய்/பாதுகாவலர் இலக்கத்தைப் பதிவிடவும்.
📝 தேவையான ஆவணங்கள்:
  • தேசிய அடையாள அட்டை
  • உயரம் (சென்டிமீட்டரில்)
  • க.பொ.த (சா.தர/உ.தர) சான்றிதழ் & Z-Score விபரங்கள்
  • வங்கி ரசீது (Bank Slip)
ℹ️ முக்கிய குறிப்பு: விண்ணப்பத்தை ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். உ.தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய அதே அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தவும்.
📞 உதவித் தேவைப்படின்:
தொலைபேசி: 0112 340 007 (வேலை நாட்களில் 9 AM – 4 PM)
மின்னஞ்சல்: hrcodmoh@gmail.com
Dr.W.K. Wickremasinghe
Additional Secretary (Medical Services)
Ministry of Health, Colombo 10